அக்னிச் சட்டி ஏந்திய கஞ்சா கருப்பு! சமயபுரம் மாரியம்மனிடம் பிரார்த்தனை! எடப்பாடி சிஎம் ஆகனுமாம்!
திருச்சி: எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என்ற வேண்டுதலுடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அக்னிச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார் நடிகர் கஞ்சா கருப்பு.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றிருப்பது தனக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

திமுக ஆட்சியை பற்றி கேள்வி கேட்டு தன்னை மாட்டிவிட வேண்டாம் என செய்தியாளர்களிடம் கெஞ்சிய நடிகர் கஞ்சா கருப்பு, திமுக ஆட்சியை பற்றி மக்களுக்கே நல்லா தெரியும் என பீடிகை போட்டு சிரித்தார்.

திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்ந்திருப்பதாகவும், விலைவாசி உயர்வு இருப்பதாகவும் இதனால் மீண்டும் அதிமுக ஆட்சியே அமைய வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டியிருப்பதாகவும் நடிகர் கஞ்சா கருப்பு கூறியிருக்கிறார்.
முன்பைக் காட்டிலும் தற்போது தனக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருவதாகவும் இப்போது கூட நாற்காலி, இறைவன் மிகப் பெரியவன், என நான்கு திரைப்படங்களில் நடித்திருப்பதாக கூறினார்.
இயக்குநர் அமீர் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த இவர் அடிப்படையிலேயே அதிமுக அனுதாபியாக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவரது முன்னிலையில் அதிமுகவில் தன்னை உறுப்பினராகவே இணைத்துக் கொண்டார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு வந்த போதும் அதனை நாசூக்காக தவிர்த்து வந்தார். இதனிடையே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு சிறிது காலம் கமல்ஹாசன் புகழ் பாடிக் கொண்டிருந்தார்.
இப்போது எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்ற முழக்கத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.

நடிகர் கஞ்சா கருப்புடன் சேர்ந்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டி அக்னிச்சட்டி ஏந்தி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications