தமிழ்நாடு வரும் வடமாநில தொழிலாளர்கள்.. நடிகர் சத்யராஜ் கொடுத்த ஐடியா... திமுக உற்சாகம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழ்நாட்டை நோக்கி வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு நம்முடைய திராவிட மாடல், நம்முடைய திராவிட சித்தாந்தங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்கம்,அஸ்ஸாம், பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் ,தென்மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வேலை தேடி அதிக அளவில் வருகிறார்கள். குறிப்பாக சொல்வது என்றால், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவில் வட மாநில தொழிலாளர்கள் எல்லா தொழில்களிலும் நிறைந்துள்ளார்கள்.

Actor Sathyaraj northern state workers Dravidian

தமிழ்நாட்டை பொறுத்தவரை கட்டுமான தொழில், ஜவுளி, விவசாயம், ஓட்டல் மற்றும் உணவகம், அழகு நிலையங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றம் பல்வேறு வகையான தொழிற்சாலைகளில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். குறைவான ஊதியம்,அதிகப்படியான வேலை, அடிக்கடி விடுமுறை எடுக்க மாட்டார்கள் உள்ளிட்ட காரணங்களால் வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் அதிக அளவு வேலைகளில் பணியமர்த்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோட்டில் கூலி தொழிலாளர்களாக அதிக அளவில் வட மாநில தொழிலாளர்கள் இருக்கிறார்கள். வட மாநில தொழிலாளர்கள் இல்லாத கட்டுமான நிறுவனங்களையே பார்க்க முடியாது. மெட்ரோ முதல் பாலம் கட்டுவது, வீடு கட்டுவது வரை எல்லா பணிகளிலும் வட மாநில தொழிலாளர்கள் நிறைந்துள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு முழுவதும் எத்தனை லட்சம் பேர் இருப்பார்கள் என்பது குறித்து சரியான கணக்கெடுப்புகள் இல்லை.. ஆனால் சுமார் 50 லட்சம் பேர் அளவிற்கு இருப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது. தினசரி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும், கோவை ரயில் நிலையத்திற்கும், திருப்பூர் ரயில் நிலையத்திற்கும் வட மாநில தொழிலாளர்கள் புதிது புததாக வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த சூழலில் தமிழ்நாட்டை நோக்கி வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு நம்முடைய திராவிட மாடல், நம்முடைய திராவிட சித்தாந்தங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சத்யராஜ் பேசுகையில், வடமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து இங்கு ஏன் வருகிறார்கள்.. அங்கு சரியில்லை என்பதால் வருகிறார்கள். அப்படி வரும் எல்லாருக்கும் உண்மையிலேயே, நம்முடைய திராவிட மாடல், திராவிட சித்தாந்தங்கள் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை.. அவர்கள் எப்படியும் சந்ததி சந்தியாக இங்குதான் இருக்க போகிறார்கள்..

நம்மூரில் இருந்து அமெரிக்காவிற்கு பிழைக்க போனவர்கள்.. அமெரிக்காவை விட்டு வருவது இல்லை.. போனால் அமெரிக்காவில் செட்டில் தான்.. லண்டனுக்கு போனாலும் லண்டனில் செட்டில் தான்.. அதுமாதிரி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வருபவர்களும், பீகார் போன்ற பல்வேறு வடமாநிலங்களில் கஷ்டத்தில் இருந்து வருபவர்களுக்கு தமிழ்நாடு வந்து அமெரிக்கா மாதிரி தான்.. இங்கிருந்து அவர்கள் போக மாட்டார்கள். அவங்களுக்கு வந்து சுயமரியாதை என்றால் என்ன, பகுத்தறிவு சிந்தனை என்றால் என்ன, திராவிட மாடல் என்றால் என்ன போன்ற விஷயங்களை அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.

அவர்களுக்கு தமிழ் தெரியாமல் இருந்தாலும் கூட.. எப்படியும் ஒரு ஜெனரேசனில் கற்றுக்கொள்வார்கள்.. அவர்களுக்கு அவர்களது மொழியிலேயே, சுயமரியாதை என்றால் என்ன, பகுத்தறிவு என்றால் என்ன, பெண் விடுதலை என்றால் என்ன, பிறப்பால் யாரும் உயர்ந்தவனும் இல்லை.. தாழ்ந்தவனும் இல்லை என்பதை சின்ன வகுப்பு எடுத்தால் போதும்.. ஏனெனில் வட மாநிலங்களில் பிறப்பின் அடிப்படையில் கொடுமைகளுக்கு அளவே இல்லை... எனவே வகுப்பு எடுத்து கற்றுக்கொடுத்தால் தான், ஏன் திராவிடம் 40க்கு 40 அடித்தார்கள் என்பது தெரியும். இதை எல்லாம் சொல்லி கொடுத்திருந்தால் உத்தரப்பிரதேசத்தில் 50 சதவீதம் அல்ல.. அங்குமே ஜெயித்திருப்போம். மக்களை கேள்வி கேட்கவிடுங்கள்.. கண்டிப்பாக வட இந்தியாவிலும் மாற்றம் வரும்" என்று சத்யராஜ் கூறினார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+