திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தோத்துப் போன பரமேஸ்வரி கணவர்.. ஏலத்தில் எடுத்த ரூ. 14 லட்சம்.. திருப்பி கேட்டாரா.. பரபர வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    தோத்துப் போன பரமேஸ்வரி கணவர்.. ஏலத்தில் எடுத்த ரூ. 14 லட்சம்.. திருப்பி கேட்டாரா.. - வீடியோ

    திருச்சி: 14 லட்சத்துக்கு ஏலம் எடுத்தும், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி கணவர் தோற்றுவிட்டார்.. இதனால், தான் கொடுத்த 14 லட்சத்தை பணத்தை திருப்பி கேட்பதாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

    திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முருகன் என்பவர் போட்டியிட்டார்.. இவர் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர்.. இவரை எதிர்த்து திமுக சார்பில் ஸ்ரீதர் களமிறங்கினார்.

    தன்னுடைய கணவனை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற அதிக தீவிரத்தை ஆரம்பத்தில் இருந்தே காட்டினார் பரமேஸ்வரி.. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் பாலையூர், கரியமாணிக்கம், வலையூர் ஆகிய 3 ஊராட்சிகள் உள்ளன.

    ஏலம் விடப்பட்டது

    ஏலம் விடப்பட்டது

    இதில் வலையூர் ஊராட்சியில் உள்ளாட்சிப் பதவிகளை கிராம முக்கியஸ்தர்கள் சார்பில் ஏலம் விடப்பட்டது. அப்போது ஒன்றிய கவுன்சிலர் பதவியை 14 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார் முருகன். இதேபோல், ஊராட்சித் தலைவர் பதவியும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியும் ஏலம் விடப்பட்டது.

    விசாரணை

    விசாரணை

    இச்சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஏலம் எடுத்ததைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாககூட அறிவித்தனர். இதையடுத்து ஏலம் எடுத்தவர்கள் மீது சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.

    தோல்வி

    தோல்வி

    இதில் வாக்கு எண்ணிக்கையின்பொது, மண்ணச்சநல்லூர் ஒன்றிய 4-வது வார்டில் திமுக வேட்பாளர் ஸ்ரீதர் 2511 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.. ஆனால் முருகன் 1024 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதிமுகவின் எம்எல்ஏவின் கணவர் தோல்வி அடைந்தது பெருத்த அதிர்ச்சியை அந்த பகுதியில் ஏற்படுத்தியது. இந்நிலையில், பரமேஸ்வரியின் கணவர் தோற்று விட்டதால் தான் கொடுத்த 14 லட்சத்தை பணத்தை திருப்பி கேட்பதாக வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

    வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    பரமேஸ்வரியும், முருகனும், வளையூர் பகுதியில் 14 லட்சம் கொடுத்ததாகவும் அந்தப் பணத்தை ஒரு சிலர் அப்படியே வைத்துக் கொண்டதாகவும் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தன் கணவருக்காக கொடுத்த 14 லட்சம் பணத்தை அப்படியே தங்களிடம் கொடுக்கவேண்டும் என்று பரமேஸ்வரி கேட்பதாகவும் தகவல் பரவி வருகிறது.

    உண்மையா?

    உண்மையா?

    மேலும் தொகுதிக்கு எம்எல்ஏ இதுவரை எதுவுமே செய்யவில்லை என்றும் அந்த வீடியோவில் சிலர் குற்றஞ்சாட்டுவதாக உள்ளது. ஆனால், இந்த வீடியோ எந்த அளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை.. எம்எல்ஏ பரமேஸ்வரி பணத்தை திருப்பி கேட்பது போன்ற அதிகாரப்பூர்வமான எந்த வீடியோவும், தகவலும் வெளிவராத நிலையில், இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    trichy aiadmk mla parameshwari husband Auction Case issue and this video goes viral on socials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X