பத்திரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்.. பரபரத்த திருச்சி! தயார் நிலையில் இருந்த மருத்துவமனைகள்!
திருச்சி: திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் திருச்சி மற்றும் புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் வட்டமடித்த நிலையில் பத்திரமாக தரையிறங்கியது.
திருச்சியில் இருந்து இன்று மாலை சுமார் 141 பயணிகள் மற்றும் விமானி உள்ளிட்ட விமான பணியாளர்களுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது.

சுமார் 5.40 மணிக்கு விமானம் ஓடு தளத்திலிருந்து வானில் பறந்த நிலையில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானம் நடுவானில் சென்ற போது திடீரென சக்கரங்கள் உள்ளே செல்லாததால் விமானத்தை மேலும் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதை அடுத்து எரி பொருள் தீர்ந்த பிறகு விமானத்தை தரை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விமானம் நடுவானில் வட்டம் அடித்து வருகிறது. பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் விமான நிலையத்தில் தீயணைப்புத் துறை வீரர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இருக்கும் நிலையில் விமான பயணிகளும், விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்படும் எனவும் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட நிர்வாகத்தினர், மாவட்ட ஆட்சியர் பிரதீப் உள்ளிட்டோர் விமான நிலையம் விரைந்துள்ளனர். மேலும் விமானம் தர இறங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் சிறிது நேரத்தில் பத்திரமாக விமானம் தரையிறக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் குறைந்தவுடன் விமானம் தரையிறங்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் விமானப் பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. குடியரசுத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரும் வழியானது திறக்கப்பட்டு, அந்த வழியாக ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட உள்ளன. விமானத்தில் இருக்கும் பயணிகளுக்கு அச்சம், பதட்டம் உள்ளிட்டதே காரணமாக உடல் நலக்குறைவு ஏதாவது ஏற்பட்டால் உடனடியாக அவர்களுக்கு முதலுதவி செய்ய மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்கிறது.

அது மட்டும் அல்லாமல் திருச்சி மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைகள் தயாராக இருக்குமாறு உத்தரவிடப்பட்டது. குறிப்பாக திருச்சி விமான நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அரசு மருத்துவமனையும், இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளும் தயாராக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அவசர மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், படுக்கைகள் உள்ளிட்டவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இரவு சுமார் 8.30 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள், அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர். தொடர்ந்து பிபி சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகளை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு வேண்டிய உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications