பெருமூச்சுவிட்ட திருச்சி.. 2 மணி நேர வட்டமிடலுக்கு பிறகு சாதுர்யமாக தரையிறக்கிய ஏர் இந்தியா விமானி!
திருச்சி: திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2 மணி நேரமாக விமானம் வானத்தில் வட்டமிட்டது. பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், விமான நிலையத்திற்கு வெளியே 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். பயணிகளும், அவர்கள் உறவினர்களும்.. ஏன் மொத்த நாடுமே பதற்றத்தில் உறைந்த நிலையில், அந்த விமானம் எவ்வித பிரச்சினையும் இன்றி திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு 141 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 என்ற விமானம் புறப்பட்டு சென்றது.

சுமார் 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான பயணிகள் அந்த விமானத்தில் பயணிப்பதற்காக விமான நிலையம் வந்தனர். தொடர்ந்து பாதுகாப்பு சோதனை முடிவடைந்து திட்டமிட்டபடி விமானம் 5.40 மணிக்கு புறப்பட்டு சென்றது.
ரன் வேயிலிருந்து விமானம் புறப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை எல்லைப் பகுதியை அடைந்தது. ஆனால் தொடர்ந்து பயணிக்காமல், பாரக்குடி. மலப்பட்டி, ஆவூர், முக்கோண மலைப்பட்டி, ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளில் அந்த விமானம் தொடர்ந்து வட்டமடித்தபடி இருந்தது. ஆனால் ஒரே விமானம் தொடர்ந்து அந்த பகுதியில் சுற்றி சுற்றி வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 616 விமானம் தான் புதுக்கோட்டை பகுதியில் வட்டமடித்து வந்தது தெரிய வந்தது.
துபாய் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் தான் லாண்டிங் கியரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சக்கரங்கள் உள்ளே செல்லாததால் வட்டம் அடித்து வருவதாக அதிகாரிகள் கூறினர். விமானத்தின் ஹைட்ராலிக் பிரச்சனை ஏற்பட்டதால் சக்கரங்களை உள்ளே இழுக்க முடியாமல் விமானம் பறந்துள்ளது. தொடர்ந்து விமானம் தரையிறங்க முடியாததன் காரணமாக வட்டமடித்து வருவதாகவும், விமானத்தின் எரிபொருள் குறைந்த பிறகு அதனை தரையில் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
விமானத்தில் எரி பொருளோடு தரையிறக்கப்பட்டால் தீ விபத்து உள்ளிட்டவை ஏற்படும், என்பதால் எரிபொருள் தீர்ந்த பிறகு தரையிறக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டன. மேலும் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராப்புசல் பகுதியில் பயணித்த விமானம் 8.15 மணியளவில் தான் வழக்கமாக சுற்றி வந்த சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி திருச்சி விமான நிலையத்தை நோக்கி பயணித்தது. அதே நேரத்தில் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் இருந்த நிலையில் விமானம் எந்தவித பிரச்சனையும் இன்றி தரை இறங்கியது.
அதே நேரத்தில் விமானத்தின் சக்கரம் மூலமாகவே 'நார்மல் லேண்டிங்' என்ற முறையில் விமானம் தரை இறக்கப்பட்டது. விமானியின் சாதுர்யத்தால் பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில் லேசாக புகை மட்டுமே வந்தது. தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த பயணிகளும் சுற்றுவட்டார பகுதிகளில் திரண்ட பயணிகளும் கைதட்டி உற்சாகமாக பயணிகளை வரவேற்றனர். தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் பயணிகள் அனைவரையும் பத்திரமாக அழைத்து வரும் பணியில் அதிகாரிகளும் தீயணைப்புத் துறை வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications