இந்த அகிலா அடிக்கும் கும்மாளத்தை பாருங்க.. 4 பேர் பாக்கறாங்கன்ற கூச்சமே "இவளுக்கு" இல்லையே, சீச்சீ!
திருச்சி: திருச்சியில் புதிதாக கட்டப்பட்ட குளத்தில் யானை அகிலா உற்சாகமாக குளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்று நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். இங்கு அகிலா என்ற யானை 10 ஆண்டுகளாக தங்கி இறைபணி செய்து வருகிறது.
கோடைக் காலம் தொடங்கியவுடன் யானைகள் தேக்கம்பட்டி நல்வாழ்வு முகாமிற்கு கொண்டு செல்லப்படும். அங்கு யானைகளின் மன உளைச்சலை போக்கும் விதமாக அதற்கு பிடித்த மாதிரியான சூழலை அரசு அமைத்து தரும்.

மதம் பிடிக்காமல் இருக்க..
இந்த முகாம் முடிந்ததும் யானைகள் வழக்கமாக தங்கியிருந்த கோயில்களுக்கு அனுப்பப்படும். இதன் மூலம் யானைகள் மதம் பிடிக்காமல் இருக்க வழி வகுக்கும். இந்த நிலையில் தேக்கம்பட்டி முகாமுக்கு சென்றுவிட்டு வந்த யானை அகிலா திருச்சியிலும் அதே மனநிலையை அடைய வேண்டும் என்பதற்காக கோயில் வளாகம் ஒரு செயலை செய்துள்ளது.

குளம்
அதாவது கோயில் வளாகத்தில் நாச்சியார் தோப்பு பகுதியில் 20 அடி நீளம், 20 அடி அகலம், 6 அடி ஆழத்தில் தடுப்பு சுவர் கொண்ட குளம் கட்டப்பட்டுள்ளது. மேலும் அகிலா குளத்திற்குள் சென்று வருவதற்கு வசதியாக சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்முறை
நேற்று முதல் முறையாக அகிலா அந்த குளத்தில் இறங்கி உற்சாக குளியல் போட்டது. அதிலும் புதிய குளத்தில் இறங்கி இந்த அகிலா அடித்த லூட்டி இருக்கே, அப்பப்பா... இது குளியல் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. தும்பிக்கையை தண்ணீரில் விட்டு தலையை ஆட்டி ஆட்டி ரசிக்கிறது. ஒரு காலால் தண்ணீரை உதைப்பது போன்ற குசும்பு செயலிலும் இது ஈடுபட்டது.

நடைபயிற்சி
இதன் மூலம் யானையின் மனநிலை சீராக இருக்கும் என வனத்துறையினர் தெரிவிக்கிறார்கள். மேலும் இந்த அகிலா தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக கோயில் வளாகத்தில் மரங்கள் அமைத்து இயற்கையான வனப்பகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications