ஸ்ரீரங்கத்திற்கு வந்த சசிகலா... ஓடிப்போய் ஆதரவு கேட்ட அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்
சசிகலா இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அமமுக நிர்வாகிகள் சசிகலா சந்தித்தனர். ஸ்ரீரங்கம் தொகுதி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்பட
திருச்சி: ஸ்ரீரங்கம் அமமுக வேட்பாளரும், திருச்சி மாநகர முன்னாள் மேயருமான சாருபாலா தொண்டைமான், ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்கு வந்து சசிகலாவை சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி சென்னை திரும்பினார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சொன்ன சசிகலா அதன்பிறகு அமைதியாகி விட்டார். அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் அறிக்கை வெளியிட்ட சசிகலா, ஆன்மீக பயணம் கிளம்பி விட்டார்.
இரு தினங்களுக்கு முன்பு தஞ்சை வந்த சசிகலா தனது கணவர் நடராஜன் இல்லத்தில் தங்கியிருந்தார். சசிகலாவின் கணவர் நடராஜனின் தம்பி பழனிவேலுவின் பேரக்குழந்தைகளுக்கு, அவர்களது குலதெய்வ கோயிலான வீரனார் கோவிலில் காது குத்து விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தார்.

சசிகலா சாமி தரிசனம்
அங்கிருந்து புறப்பட்டு போன சசிகலாதிருவிடைமருதூர் மகாலிங்க சாமி கோயிலில் தரிசனம் செய்தார். அங்கு ரேவதி நட்சத்திர லிங்கத்திற்கு யாகம் செய்து வழிபட்டார் சசிகலா. மகாலிங்கசாமி கோவில் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி தலம் என்பதால் தோஷங்கள் நீங்க வழிபட்டார் சசிகலா.

ஸ்ரீரங்கத்திற்கு வந்த சசிகலா
திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு இன்று காலை வந்த சசிகலாவுக்கு ரங்கா, ரங்கா கோபுர வாசலில் அவரது ஆதரவாளர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அங்கிருந்து பேட்டரி கார் மூலம் கோயிலுக்குள் சென்ற சசிகலாவை கோயில் பட்டர்கள் வரவேற்று சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

சசிகலாவை சந்தித்த ஆதரவாளர்கள்
ரங்கநாதர் கோயிலில் கருடாழ்வாரை தரிசித்த சசிகலா மூலவர் ஸ்ரீரங்கநாதரை வழிபட்டார். பின்னர் தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, ராமானுஜர் சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கத்திற்கு சசிகலா வருவதை அறிந்த அவரது ஆதரவாளர்களும் அமமுகவின் முக்கிய நிர்வாகிகளும் அவரை சந்திப்பதற்காகக் காத்திருந்தனர்.

ஸ்ரீரங்கம் அமமுக வேட்பாளர்
ஸ்ரீரங்கம் அமமுக வேட்பாளரும், திருச்சி மாநகர முன்னாள் மேயருமான சாருபாலா தொண்டைமான், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். சசிகலா வருகை குறித்த தகவல் தெரிந்தவுடன் பிரசாரத்திற்கிடையே ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து சசிகலாவை சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பினார். அதேநேரம் அமமுக மாவட்ட செயலாளரும், கிழக்கு தொகுதி வேட்பாளருமான மனோகர் சசிகலாவுடனான சந்திப்பை தவிர்த்தார்.

நடராஜன் நினைவு தினம்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து முதன் முறையாக திருச்சி வந்த சசிகலா, பெரிய அளவில் ஆரவாரமின்றி அமைதியாக வந்து சென்றார். மார்ச் 20ஆம் தேதி சசிகலாவின் கணவர் நடராஜனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு விளாரில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்து விட்டு சசிகலா மீண்டும் சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications