ஒன்னாப்பு பசங்களால ரொம்ப நேரம் மாஸ்க் போட முடியாது.. வேறு ஐடியா சொன்ன அமைச்சர்!
திருச்சி: ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் உள்ள காதி கிராப்ட் விற்பனையகத்தில் தீபாவளிக்கான சிறப்பு விற்பனையை பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது போல நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது..

கருத்துகள்
பள்ளிகளைத் திறக்க மாவட்ட வாரியாக கல்வித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவித்த நிலையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது சுகாதாரத் துறை மருத்துவ வல்லுநர் குழு கருத்துக்களின் படி தான் பள்ளியை திறக்க முடிவு செய்தார். ஆகவே பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் கிடையாது.

சுழற்சி முறை
ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் ஒன்றாம் வகுப்பு மாணவன் வெகுநேரம் முகக்கவசம் அணிந்து இருக்க இயலாது. ஆகவே அது தொடர்பாக பின்னர் ஆய்வு செய்து அதற்குண்டான நேரம் அறிவிக்கப்படும். தற்போதைய நிலையில் பிஞ்சு குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்பதே நோக்கம்.

தமிழகத்தில் 98 சதவீதம்
அந்த அடிப்படையில்தான் பள்ளிகள் திறக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 98 சதவீத ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பள்ளி கல்வித்துறை ஊழியர்கள் தடுப்பூசி முழுமையாக செலுத்தி இருக்கிறார்கள். பல்வேறு வியாதிகளுக்கு ஆட்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மட்டுமே 2 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்த இயலாத நிலையில் இருக்கிறார்கள்.

அரசாணை
பாடத்திட்டம் குறைப்பது குறித்து ஏற்கெனவே அரசாணை வெளியிட்டுள்ளது என தெரிவித்தார். தீபாவளி பண்டிகைக்கு பின்னர் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் திட்டமிட்டபடி நவம்பர் 1 முதல் பள்ளிகள் இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications