திமுக திருந்தணுமாம்.. மற்றபடி ஆட்சியைலாம் கலைக்க ட்ரை பண்ணாதாம் பாஜக.. சொல்கிறார் அண்ணாமலை
திருச்சி: பாஜக வெளியிடும் ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து திமுக தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். இந்த ஆட்சியை கவிழ்ப்பது பாஜகவின் நோக்கமல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருச்சியில் புதன்கிழமை பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில் கடந்த 8 ஆண்டு காலத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது.
இனி கட்டப்படும் 16லட்சம் நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டப்படுகின்றன. 17 கோடியே 96 லட்சம் ஆயுஷ்மான் பவன் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி, கோதுமை ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கிசான் கார்டு
கிசான் கிரெடிட் கார்டு 30 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. பிரதமர் மோடி சிறப்பாக கையாண்டதால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. இந்தியாவில் கொரானா, 3வது, 4வது, 5வது அலை ஏற்படாதற்கு காரணம் மோடி அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம்.

முத்தலாக்
முத்தலாக் தடை செய்ததன் மூலம் 82 சதவீதம் முத்தலாக் விவாகரத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 4 கோடி போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கபட்டுள்ளது. 4 கோடி போலி எல்பிஜி கேஸ் இணைப்பு ஒழிக்கப்பட்டுள்ளது. 1 கோடி 15 ஆயிரம் கோடி காதியில் மட்டும் விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறோம். இந்தியாவில் 7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

ரூபே கார்டு
ரூபே கார்டு மூலம் 70 கோடி பேர் இணைந்து உள்ளார்கள். 2014 க்கு பின் தமிழகத்தில் 228 சிலைகள் வெளிநாட்டில் இருந்து மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. 22,500 பேர் உக்ரைனில் சிக்கித் தவித்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 70 ஆண்டுகளாக செய்ய முடியாத சாதனையை எட்டு ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி செய்துள்ளது. மரபுசாரா எரிசக்தி துறை, 300 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

காற்றின் சக்தி
வெயில் மற்றும் காற்றின் சக்தியை பெறுவதில் உலகளவில் இந்தியா, 4வது இடத்தை பெற்றுள்ளது. இன்று முதல் வரும் ஜூன், 15ம் தேதி தேதி வரை பாஜக விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம். முல்லைப் பெரியாறு திமுக கபட நாடகம். எல்லாக் கட்சிகளும் அவர்களது கருத்தை தெரிவிக்கலாம், அவர்களுக்கு கட்சி நம்பர் ஒன் கட்சி என தெரிவிக்கலாம்.
எல்லாக் காரியத்திலும் பாஜக மக்களுக்கு ஆதரவாக இருந்துள்ளது.

பாஜக வளர்ச்சி
பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வளர்ச்சி பாதையில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.மேகதாது வேண்டும் என கர்நாடக சிவகுமார் ஊர்வலம் செல்கிறார், கேரளவில் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு குறித்து திமுக ஸ்டாலின் பேசவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் திமுக இரட்டை வேடம் போடுகிறது. மக்களின் அன்பைப் பெற்று நம்பர் ஒன் ஆக வருவதற்காக கடினமாக உழைப்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தமிழகத்தில் நன்கு ஆட்சி செய்ய பாஜக ஒத்துழைப்பு அளிக்கும் என தெரிவித்து இருந்தோம்.

புதிய கல்விக் கொள்கை
அமைச்சர் பொன்முடிக்கு புதிய கல்விக் கொள்கை குறித்த புரிதல் இல்லை. புதிய கல்விக் கொள்கை குறித்து அவர் முழுவதும் படிக்கவில்லை. ஜிஎஸ்டி கணக்கில் 25ஆயிரம் கோடி தான் உள்ளது. தமிழகத்துக்கு தேவையான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ஜிஎஸ்டி கால்குலேசன்படியே வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முழுத் தொகையையும் வந்துவிட்டது. பாஜக வெளியிடும் ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து திமுக தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். இந்த ஆட்சியை கவிழ்ப்பது பாஜகவின் நோக்கமல்ல என்றார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications