ஒரே கட்டடம்... 14 பேருக்கு கொரோனா.. திருச்சியில் செம ஷாக்.. மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை
திருச்சி: தினசரி கொரோனா பாதிப்பு திருச்சியில் 150ஆக அதிகரித்துள்ள நிலையில், ஸ்ரீரங்கம் அடுக்குமாடிக் குடியிருப்பில் அதிக பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தக் கட்டடம் மூடப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பும் 3000ஐ கடந்துள்ளது. இதன் காரணமாக விரைவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, சென்னை, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவலின் வேகம் அதிகமாக உள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,094 ஆக அதிகரித்துள்ளது.
அதிலும் ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் மட்டும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பிரதான வாசல் மூடப்பட்டு உள்ளது. அந்த குடியிருப்பில் மொத்தம் 37 வீடுகள் உள்ளன.
சவுக்கு கட்டைகளால் வாசல் மூடப்பட்டுள்ளது. அதேநேரம் குடியிருப்பின் பக்கவாட்டு வாசல் வழியாக உள்ளே சென்று வர வசதி உள்ளது. அதிக பேருக்கு கொரோனா பரவியதைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அங்குக் கிருமி நாசினியை தெளித்து சுத்தம் செய்தனர்.
இதுதவிர ஸ்ரீரங்கம் பகுதியில் ஒரு ஓட்டல், ஒரு வணிக வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவையும் மூடப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications