Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பங்காரு அடிகளார் மறைவு தமிழருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு! முஸ்லீம் லீக் காதர் மொகிதீன் வேதனை!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: பங்காரு அடிகளார் மறைவு தமிழருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது ;

ஆன்மீக நேயர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்த பீடம் நிறுவனர் பங்காரு அடிகளார் அவர்கள் தனது 82 வது அகவையில் மண்ணுலகைத் துறந்து விண்ணுலகு எய்தியுள்ள செய்தி அறிந்து மிகவும் விசனம் ஏற்பட்டது. ஒன்றே குலம்; ஒருவனே தேவன், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் : தான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற வாழ்க்கை இலட்சியத்தில் வாழ்ந்து, மக்களுக்கு நேர்வழியில் நடக்க வழிகாட்டியாகத் திகழ்ந்து வந்த ஆன்மீக நேயர் மானிடரின் போற்றுதலுக்குரிய இறை நெறியாளர்.

Bangaru Adigalar death is an irreparable loss for Tamils, Iuml president Khader mohideen agony

நன்மை செய்யும் பண்பு: ஆதிபராசக்தி சக்தி பீடங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கி, அங்கெல்லாம் மகளிரின் தலைமையில் பக்தி நெறியைப் பரப்பியவர் அடிகளார் அவர்கள். ' பெண்ணிற் பெருத்தக்க யாவுள ' என்பதனை வாழ்வு நெறியாக்கி, தமிழ் மக்கள் பின்பற்றும் படி செய்த பெருமை அடிகளாருடையது. பக்தியால் பரவசம் ஏற்படவும், அதே சமயத்தில் அன்பு, பாசம், நல்லெண்ணம், நன்மை செய்யும் பண்பு, அனைவரையும் அரவணைத்து வாழும் ஆன்மநேய மனிதாபிமானம் போன்றவற்றைத் தானும் பின்பற்றி, தன்னைப் பின் பற்றியோரையும் பின்பற்றுமாறு செய்த மாண்பு அடிகளாருடையது.

மனித நேயத்தை வளர்த்து: அவரின் மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், அன்னதானக் கூடங்கள் யாவும் எல்லோருக்கும் உரியதாகவே நடத்தி மனித நேயத்தை வளர்த்து வந்தவர்: ஏழை எளியவர்களுக்கு அவரின் உபசாரமும் உபசரிப்பும் உரிய உதவிகளும் வரலாற்றுச் சாதனைகளாகத் திகழ்பவையாகும். அடிகளார் அவர்களின் பிறந்த நாளின் போது, அவருக்கு வாழ்த்துக் கூறுவதும், பிறந்த நாள் சிறப்பு மலரில் வாழ்த்துரை வழங்குவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து செய்து வந்திருக்கிறது.

பெண்ணியத்தின் பெருமை: அடிகளாரின் சமய நெறி, மனித சமுதாயத்தை நெறிப்படுத்துவதற்கும், மனித நேயத்தை வளர்ப்பதற்கும், ஒற்றுமையை ஓங்கச் செய்வதற்கும், அதே சமயத்தில் பெண்ணியத்தின் பெருமையை மண்ணில் உள்ளோர் அனைவரும் உணர்ந்து வாழ வேண்டும் என்பதற்கும் வழிகாட்டி வந்தது. மானிடருக்குச் செய்யும் நன்மையும் தொண்டும் மகேசனுக்குச் செய்வதுதான் என்பதை தனது வாழ்வாக்கிக் கொண்டு வாழ்ந்த அடிகளாரின் மறைவு, தமிழருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

எல்லாம் வல்ல சக்தி: அவரின் மறைவால், அவரின் இலட்சியமும், சேவையும் சிஞ்சித்தும் குறைபட்டு விடாமல் முன்னெடுத்துக் செல்லும் அமைப்பும் அவரின் அருமை வாரிசும் இருக்கின்றன. அடிகளார் மறைந்தாலும், அவரின் தொண்டு நாள் இருக்கும் நாளெல்லாம் தொடரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அடிகளார் மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. அப்பெரியாரின் ஆன்ம சாந்திக்கு எல்லாம் வல்ல சக்தியிடம் பிரார்த்தனை செய்வோம்.

பக்த கோடிகள்: அடிகளாரின் மறைவால், வாடும் அவரின் அன்பு இல்லத்தாருக்கும் அவரின் பக்த கோடிகளுக்கும் ஆறுதலை கூறுவதோடு, அவர்களுக்கு இ. யூ. மு. லீக் தனது ஆழ்ந்த அனுதாபங்களை சமர்ப்பிக்கிறது இவ்வாறு பேராசிரியர் கே. எம் காதர் மொகிதீன் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+