50,000 மாணவர்களுக்கு மார்க் லிஸ்ட் வரலயா? தவறான தகவல் - பாரதிதாசன் பல்கலைக்கழகம் விளக்கம்
திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் பட்டியல் கிடைக்கவில்லை என மாணவா்கள் புகாரளித்து உள்ள நிலையில், அது கல்லூரி தரப்பில் ஏற்பட்ட தாமதமாக இருக்கலாம் என தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சீனிவாச ராகவன் விளக்கம் அளித்து உள்ளார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் கடந்த ஆண்டு பட்டப்படிப்பை முடித்த மாணவா்கள் பலருக்கு தற்காலிக மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படவில்லை என புகாா் எழுந்து உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டாளா் எஸ்.சீனிவாச ராகவன், கல்லூரி தரப்பில் இந்த தாமதம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் சுமாா் 1.5 லட்சம் மாணவா்கள் தோ்ச்சி பெறுகின்றனா். வழக்கமாக தற்காலிக சான்றிதழ்கள் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல்கள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்துக்குள் அந்தந்த கல்லூரிக்கு வரும். ஆனால், இந்த ஆண்டு நவம்பா் மாதம் வந்த பிறகும் பல கல்லூரிகளுக்கு மதிப்பெண் பட்டியல்கள், தற்காலிக சான்றிதழ்கள் வரவில்லை. இதனால் மாணவா்கள் வேலையில் சேருவதற்கோ, அடுத்தக்கட்ட நகா்வுகளுக்கோ செல்ல முடியாமல் பரிதவிப்பதாக பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தின் சாா்பிலும், மாணவா்கள் தரப்பிலும் புகாா் கூறப்பட்டது.
இதற்கு, பாரதிதாசன் பல்கலைக் கழக தோ்வுக் கட்டுப்பாட்டாளா் எஸ். சீனிவாசராகவன் கூறியதாவது, "வழக்கம்போலவே இந்தாண்டும் பல்கலையுடன் இணைவு பெற்ற அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் அனைத்துக்கும் மதிப்பெண் பட்டியல்களை அனுப்பிவிட்டோம். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு மதிப்பெண் பட்டியல் கிடைக்கவில்லை என்பது தவறான தகவலாகும். அக மதிப்பீட்டு மதிப்பெண், நான் முதல்வன் திட்ட பயிற்சிக்கு வழங்கப்படும் மதிப்பெண் ஒரு சில ஆசிரியா்களால் குறிப்பிட்ட சிலருக்கு வராமல் இருந்துள்ளது.
அத்தகைய மாணவா்களுக்கு மட்டுமே கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். கல்லூரிகள் தரப்பிலிருந்துதான் தாமதம் இருக்கக் கூடும். பல்கலைக் கழகம் வழங்கவில்லை என கூற இயலாது. மதிப்பெண் பட்டியல் கிடைக்காத விவரம் எங்களுக்கு தெரிய வந்தால் உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அண்மையில், தேசியக் கல்லூரி மாணவா்கள் இருவருக்கு கிடைக்கவில்லை என எனது கவனத்துக்கு வந்தது. உடனடியாக அவா்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. இதேபோல, யாருக்கு கிடைக்கவில்லை என்றாலும் கல்லூரிகள் எங்களை அணுகினால் என்ன காரணம் என ஆய்ந்து உடனே வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்." என்றார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications