தேர்தல் வந்தாலே கலகலதான்.. டான்ஸுதான்.. இன்றைய ஆட்டக்காரர் சாருபாலா தொண்டைமான்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் கும்மியடித்து வாக்கு சேகரிப்பு-வீடியோ

    திருச்சி: தேர்தல் வந்து விட்டாலே வாக்காளர்களைக் கவர நாக்குகளை வளைத்து வளைத்துப் பேசுவதும், டான்ஸ் ஆடுவதும், கையெடுத்துக் கும்பிடுவதும், காலில் விழுவதும்... நிறைய நடக்கும்..

    அந்த வகையில் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு தாண்டியா ஆட்டம் ஆடு.. (பாடலை, டான்ஸ் மூவ்மென்ட் மட்டும்தான்) என்று கலகலப்பாக குச்சியை எடுத்து அடித்து ஆடி அசத்தினார்.

    இந்த வரிசையில் தற்போது திருச்சி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் கும்மியடித்து ஆடி குழப்பியுள்ளார்.. அதாவது கலக்கியுள்ளார். திருச்சி தேர்தல் பிரச்சாரத்தில்தான் இந்த கலகல களேபரம்.

    சாருபாலா தொண்டைமான்

    சாருபாலா தொண்டைமான்

    திருச்சி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் சாருபாலா தொண்டைமான் கே.கே.நகர் பகுதிக்கு பிரச்சாரத்திற்காக சென்றிருந்தார். அப்போது அங்கு சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கான பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    கும்மியடித்துக் கொண்டாட்டம்

    கும்மியடித்துக் கொண்டாட்டம்

    பெண்கள் கும்மியடித்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அவர்களிடம் ஓட்டு கேட்டு சென்ற சாருபாலா தொண்டைமான் சற்றும் யோசிக்காமல் தானும் கும்மியடிக்க தொடங்கினார். இதனால் அந்த இடத்தில் பெரும் சுவராஸ்யம் ஏற்பட்டது.

    தமிழக சட்டசபை தொகுதிகள் முழு ரவுண்ட் அப் இதாங்க!

    கும்மியடித்து வாக்கு கேட்டார்

    கும்மியடித்து வாக்கு கேட்டார்

    சாருபாலா கும்மியடித்துக்கொண்டே வாக்குசேகரிக்கும் காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட, அது திருச்சி மக்கள் மத்தியில் சாருபாலாவுக்கு நல்ல எபெக்டை தந்துள்ளது.

    ராஜா வீட்டு மருமகள்

    ராஜா வீட்டு மருமகள்

    புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட தொண்டைமான் மன்னர் குடும்பத்து மருமகள், தெருவில் இறங்கி கும்மியடிக்கிறார் என்றால் அது ஓட்டுக்காக மட்டுமே என்றும், மற்றபடி எளிமையானவர் எல்லாம் அவர் இல்லை என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+