திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக ஆட்சி.. உயர் மற்றும் ஆராய்ச்சி கல்வியின் பொற்காலம்.. ஜமால் முகமது கல்லூரியில் முதல்வர் பேச்சு

Google Oneindia Tamil News

திருச்சி: ஜமால் முகமது கல்லூரியின் புதிய கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில், கல்லூரி நிறுவனர் நாள் விழா, கல்லூரி வரலாற்றைத் தொகுக்கும் பெருந்திட்டத் தொடக்கவிழா, "குளோபல் ஜமாலியன்ஸ் பிளாக்" கட்டட அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழா, கல்லூரியின் அப்துல் கஃபூர் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்டார். அவரோடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ம. செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

1300 கிலோ போதை பொருட்கள் அழிப்பு.. 2 கோடி.. 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்- சென்னை போலீஸ் தடதட!1300 கிலோ போதை பொருட்கள் அழிப்பு.. 2 கோடி.. 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்- சென்னை போலீஸ் தடதட!

திருச்சிக்கு புகழாரம்

திருச்சிக்கு புகழாரம்

இதனைத்தொடர்ந்து ஜமால் முகமது கல்லூரியின் புதிய கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், கல்விக்கு புகழ்பெற்ற நகரம் திருச்சி. அந்த திருச்சியின் சிறந்த கல்லூரி ஜமால் முகமது கல்லூரி. தமிழக அமைச்சர்களாக செயல்பட்டு வரும் கே.என்.நேரு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்று தெரிவித்தார்.

ஜமால் முகமது, காஜா மியான்

ஜமால் முகமது, காஜா மியான்

அதேபோல் இந்தக் கல்லூரியில் படித்த மாணவர்கள் பல நாடுகளிலும் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். நாட்டுப்பற்று மிக்க சிறந்த தலைவர்களால் இந்தக் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஜமால் முகமது, இன்னொருவர் காஜா மியான் ராவுத்தர். இருவரும் சுதந்திரத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தேசிய இயக்கத்துடன் மட்டுமல்ல, சுயமரியாதை இயக்கத்திலும் இணைந்து செயல்பட்டவர்கள்.

தமிழக அரசின் திட்டம்

தமிழக அரசின் திட்டம்

பள்ளிக்கல்வியில் காமராசர் காலமும், கல்லூரி கல்வியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலமும் சிறப்பாக விளங்கியது. அதுபோல் இந்த ஆட்சியில், உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியின் பொற்காலமாக இருக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். மாணவர்களை பன்முகத்தன்மை கொண்ட திறமைகளை வளர்த்து எடுக்க கல்லூரிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Recommended Video

    ஓ பன்னீர் செல்வம் திமுகவின் பி டீமா?.. நிருபர்களின் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் இப்படி சொல்லிட்டாரே!
     உடல்நிலை பிரச்சனை

    உடல்நிலை பிரச்சனை

    முன்னதாக உடல்நிலை சரியில்லாததால் கல்லூரி நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க முடியவில்லை என்றும், வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் கல்லூரிக்கு வருகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். இவ்விழாவில் கல்லூரியின் முன்னாள், இந்நாள் பேராசிரியர்கள், முன்னாள், இந்நாள் மாணவ, மாணவியர் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    English summary
    Chief Minister MK Stalin laid the foundation stone for the new building of Jamal Mohammad College through a video present.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X