Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வானவில் மன்றம்..திருச்சியில் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..பயன்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: அரசுப்பள்ளி மாணவர்களிடை அறிவியல் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் 'வானவில் மன்றம்' அமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தொடங்கி வைத்தார். மேலும் நடமாடும் அறிவியல், கணித ஆய்வக வாகனங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக மேற் கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.

அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துக்கள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்தெடுப்படுதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டதே STEM ( Science Technology Engineering and Mathematics ) திட்டம். வானவில் மன்றம் என்பது அறிவியல் , தொழில்நுட்பம் , பொறியியல் , கணிதம் இணைந்த செயல் திட்டமாகும். இத்திட்டம் தமிழக அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.

முதல்வர் ஸ்டாலின் திருச்சி பயணம்

முதல்வர் ஸ்டாலின் திருச்சி பயணம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி மற்றும் அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, அவர் திருச்சி விமானநிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வந்தார். அங்கு, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ரூ.25 கோடி செலவில் 'வானவில் மன்றம்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாணவர்களுடன் கலந்துரையாடல்

மாணவர்களுடன் கலந்துரையாடல்

பின்னர், நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனத்தையும், மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். இதனையடுத்து அரசுப்பள்ளி மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கற்றல் செயல் திட்டம்

கற்றல் செயல் திட்டம்

STEM என்பது Science, Technology, Engineering, Mathematics என்பதன் கூட்டு தொகுப்பாகும். அதாவது அறிவியல் , தொழில்நுட்பம், பொறியியல்,கணிதம் ஆகியவற்றின் உள்ளடக்கங்களை கொண்டதான ஒரு கற்றல் செயல் திட்டமாகும். 21 ஆம் நூற்றாண்டு மனிதர்களாகிய நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவை நான்கின் தாக்கங்களும் இன்றி வாழ முடியாத சூழ்நிலையில் உள்ளோம். அறிவியல் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும், தொழில்நுட்பமும், பொறியியலும் மனித வாழ்வின் ஒவ்வொரு செயல்பாடுகளின் அம்சமாகவும் உள்ளது.அது போலவே கணிதமும். இந்த STEM திட்டத்தை அடிப்படையாக கொண்டு வானவில் மன்றங்களை தமிழ்நாட்டின் பள்ளிகளில் துவங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் படைப்பாற்றல்

மாணவர்களின் படைப்பாற்றல்

மாணவ பருவத்திலேயே படைப்பாற்றல்,விமர்சனஅறிவு, அறிவியல் மனப்பான்மை, ஆராய்ச்சி சிந்தனை , தர்க்க சிந்தனை, பகுத்தறியும் திறன் ,கூட்டு உழைப்பு ,புத்தாக்க சிந்தனை போன்றவற்றை வளர்த்தெடுக்க இத்திட்டம் உதவும். STEM என்பது திட்ட அடிப்படையிலான கற்றலை ஊக்குவிக்கிறது. வகுப்பறை பாடங்களை செய்முறைகள் மூலம் கற்பது பாடங்களை, அறிவியல் விதிகளை புரிந்து கொள்வதை எளிதாக்கும்.

அரசுப்பள்ளிகளில் வானவில் மன்றம்

அரசுப்பள்ளிகளில் வானவில் மன்றம்

அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் (13,210) 28.11.2022 பிற்பகல் 2 மணிக்கு வானவில் மன்றம் துவக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் தொடக்கமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிரண்டு எளிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். உள்ளூர் அமைச்சர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் துவக்க விழாவில் பங்கேற்க செய்ய வேண்டும். துவக்கத்தின் அடையாளமாக வண்ணமயமான பலூன்களை காற்றில் பறக்கவிடலாம். 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு வகுப்பறைக்குள் கற்பிக்கப்படும் பாடங்களோடு தொடர்பான அறிவியல் மற்றும் கணித பரிசோதனைகளை செய்வதற்கு குறைந்த பொருட்களை வாங்க ஒரு பள்ளிக்கு முதற்கட்டமாக ரூ1200 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வானவில் மன்றத்தின் பயன்கள்

வானவில் மன்றத்தின் பயன்கள்

வானவில் மன்றத்தின் முக்கிய நோக்கமே ஆசிரியர்கள் தானே சோதனைகள் செய்து காட்டி, மாணவர்களையும் சோதனைகளை செய்ய ஆர்வமூட்ட வேண்டும் ஒவ்வொரு வாரமும் பாடத்துடன் தொடர்புடைய கருத்துகளை விளக்குவதற்கு ஏற்ப பொருட்களை குறைந்த விலையில் வாங்கி பல்வேறு சோதனைகளை செய்து காட்ட வேண்டும் குழந்தைகளை கேள்விகளை கேட்க ஊக்குவிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு ஆர்வமூட்ட வேண்டும்

மாணவர்களுக்கு ஆர்வமூட்ட வேண்டும்

மாணவர்கள் சோதனை செய்யும் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் கேட்கும் ஆர்வம் உள்ள கேள்விகளுடன் பரிசோதனைகளின் ஆவணங்களை பராமரிக்க வேண்டும். ஸ்டெம் கருத்தாளர்கள் பள்ளிக்கு வருகை புரியும்போது அவர்களுடன் இணைந்து பரிசோதனைகளை செய்து காட்டவும் மற்றும் வானவில் மன்றத்தின் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கவும் ஊக்குவிக்க வேண்டும். கலந்துரையாடல்கள், விரிவுரைகள், பயிற்சி பட்டறை, பணியிடை பயிற்சிகள் ஆகியவற்றில் ஆசிரியர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். அறிவியல் நிறுவனங்களுக்கு களப் பயணம் ஏற்பாடு செய்யப்படும்போது, மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+