Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிறந்த நாள்.. இன்ஸ்டாவில் காதலன் கொடுத்த சர்ப்ரைஸ்.. விபரீத முடிவெடுத்த 10ம் வகுப்பு மாணவி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: இன்ஸ்டாகிராமில் தனது ஆண் நண்பன் புகைப்படத்தை வெளியிட்டதால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் தா.பேட்டையை சேர்ந்த சுபாஷினி ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் மருதமுத்து, கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.

மருதமுத்து சுபாஷினி தம்பதிக்கு 15 வயதில் யுவபிரியா என்ற மகள் இருந்தார். இவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் முசிறி அருகே திருத்தலையூர் பகுதியில் வசிக்கும் தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார்.

காதல்

காதல்

இதைத்தொடர்ந்து அவருக்கும், அப்பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வரும் 17 வயது மாணவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. முதலில் நண்பர்களாக பழகிவந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இதனை சுபாஷினியும், அவரது உறவினர்களும் கண்டித்துள்ளனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி யுவபிரியா பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக கல்லூரி மாணவன் இன்ஸ்டாகிராமில் யுவபிரியாவுடன் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த யுவபிரியாவின் உறவினர்கள் மற்றும் தாயார் இதுகுறித்து யுவபிரியாவிடம் கேட்டதாக தெரிகிறது. இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.

சிகிச்சை

சிகிச்சை

தனது காதலன் தன் புகைப்படத்தை வெளியிட்டுவிட்டதால் மனம் உடைந்து காணப்பட்ட யுவபிரியா கடந்த 29-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

காதலன்

காதலன்

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மாணவி யுவபிரியா பரிதாபமாக இறந்துபோனார்.இந்த சம்பவம் குறித்து தா.பேட்டை போலீசார் யுவபிரியாவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் தனது ஆண் நண்பன் புகைப்படத்தை வெளியிட்டதால் 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் முசிறி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+