ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுக-வை அசைக்க கூட முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
திருச்சி: ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்கக் கூட முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி தந்துள்ளார்.
திருச்சி தொட்டியம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

ஸ்டாலின் பொய் பிரசாரம்
தமிழகத்தில் எந்த திட்டமும் நடக்கவில்லை என்று பொய் சொல்கிறார் மு.க.ஸ்டாலின். ஆனால் மக்கள் அனைவரும் அரசின் திட்டங்களால் பயனடைந்து வருகின்றனர்.

பிளவு ஏற்படுத்த முடியாது
அதிமுக அரசை கவிழ்க்க நடந்த அத்தனை முயற்சிகளும் தோல்வி அடைந்தன. அதிமுக வலிமையான கட்சியாக தற்போது உருவெடுத்திருக்கிறது. அதிமுகவில் யாராலும் பிளவு ஏற்படுத்த முடியாது.

ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் கூட...
ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தால் கூட்ட அதிமுகவை அசைக்க கூட முடியாது. அதிமுகவில் ஒருவர் கூட இதற்கான இடத்தை தந்துவிடமாட்டார்கள். இந்த இயக்கம் உழைப்பவர்களுக்கானது.

உழைப்பால் கிடைத்த பதவி
ஸ்டாலின் ஒன்றும் உழைத்து திமுக தலைவராகவில்லை. கருணாநிதியின் மகன் என்பதற்காகவே அவர் கட்சித் தலைவரானார். நான் கடுமையாக உழைத்தேன். முதல்வர் பதவியை அடைந்திருக்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications