வெள்ள பாதிப்பை 'கடுமையான இயற்கைப் பேரிடராக' அறிவிக்கனும்.. மோடியிடம் ஸ்டாலின் வைத்த 7 கோரிக்கைகள்!
திருச்சி: தமிழ்நாடு வெள்ள பாதிப்பை 'கடுமையான இயற்கைப் பேரிடராக' அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும் என திருச்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
திருச்சியில் தமிழ்நாட்டுக்கான ரூ20,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி அர்ப்பணித்தார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் 7 கோரிக்கைகளை பிரதமர் மோடியிடன் முன்வைத்தார்.

முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த 7 கோரிக்கைகள்:
1) தென் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்தும் மக்கள் ஆன்மீகப் பயணமாக வருகிறார்கள். பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கிறார்கள். அவர்கள் எளிதாக வந்து செல்வதற்கு ஏதுவாக, மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்
2) மலேசியா மற்றும் ஜப்பான் நாடுகளோடு - தமிழ்நாடு பண்பாட்டு மற்றும் வர்த்தகத் தொடர்புகளை கொண்டிருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு, சென்னை - பினாங்கு, சென்னை - டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை முன்னுரிமை அடிப்படையில் தொடங்க வேண்டும்
மோடி நிகழ்வில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தடை? திருச்சி சூர்யா இருந்தாரே.. கோர்த்துவிடும் காயத்ரி!
3) சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்குப் 'பங்குப் பகிர்வு மாதிரி' அடிப்படையில் ஒன்றிய அரசின் பங்களிப்பை விரைந்து வழங்க வேண்டும்.
4) தமிழ்நாட்டில் இப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
5) இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படுகிற நெடுஞ்சாலைகளுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
பிரதமரை நான் நம்புகிறேன்! தொடர்ந்து கோரிக்கையா வைக்கிறேன்னு நினைச்சுடாதீங்க! ஓபனாக பேசிய ஸ்டாலின்!
6) திருச்சி மாவட்டத்தின் MSME நிறுவனங்கள்தான் 'பெல்' பொதுத்துறை நிறுவனத்துக்குத் தேவையான உதிரி பாகங்களை வழங்கிக் கொண்டு வந்தார்கள். தற்போது பெல் நிறுவனத்திடம் இருந்து இவர்களுக்கு கேட்பாணை (Procurement Order) மிகவும் குறைந்துவிட்டது. இதனால் இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் MSME நிறுவனங்கள் மிகவும் பாதிப்படைந்து இருக்கிறார்கள். எனவே, பெல் (BHEL) நிறுவனம் மீண்டும் அதிகப்படியான கேட்பாணைகளை இவர்களுக்கு வழங்க ஆவன செய்யப்பட வேண்டும்.
7) கடந்த மாதம் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில், கடுமையான மழைப்பொழிவை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, அந்த மாவட்டங்களில் பொது உட்கட்டமைப்புகள் பெருத்த சேதமடைந்திருக்கிறது. மக்களின் வாழ்வாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அவற்றை “கடுமையான இயற்கைப் பேரிடர்கள்” என்று அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கோரிக்கைகளை முன் வைத்தார்.












Click it and Unblock the Notifications