ஐ ஆம் சாரி ஐயப்பாவா? பா.ரஞ்சித், இசைவாணியை புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்! பரபர புகார் கொடுத்த பாஜக!
திருச்சி: லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடும் சபரிமலை ஐயப்பன் குறித்து அவதூறாக பாடல் பாடியதாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த பாடகியான இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி ஆணையர் அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபல யூட்யூபரான 'வணக்கம் டா மாப்ள' தேனி அருண்குமார் மீது தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தை கட்சியினரை கைது செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல பாடகியான இசைவாணியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிரபல இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மைய இசைக் குழுவான கேஸ்ட்லஸ் கலெக்டிவ் குழுவில் பாடகியாய் இருக்கிறார் இசைவாணி.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் அவர் பாடிய பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வரும் நிலையில் 'ஐ எம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா" என இசைவாணி பாடிய பாடல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல தடை உள்ள நிலையில் அது தொடர்பாகவே இசைவாணி பாடிய பாடல் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதை அடுத்து கோவை சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் கூறியிருந்தார்.
அதே நேரத்தில் இசைவாணி 5 ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடலை வைத்து வேண்டுமென்றே சர்ச்சைகள் கிளப்பப்படுவதாக அவர் தரப்பு கூறுகிறது. மேலும் தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக இசைவாணி கூறியிருந்தார். இந்நிலையில், ஐயப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தியதாக இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி ஆணையர் அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபல யூட்யூபரான 'வணக்கம் டா மாப்ள' தேனி அருண்குமார் மீது தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தை கட்சியினரை கைது செய்ய வேண்டும் எனவும் அந்த மனவில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநிலத் தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் ஜெயராம் பாண்டியன் அளித்துள்ள மனுவில்," மார்கழியில் மக்களிசை என்ற நிகழ்வில் பாடிய இசைவாணி நம்பிக்கையுடன் வழிபட்டு வரும் ஐயப்பனை பற்றி நக்கலாக பாடல் பாடியுள்ளார்.
ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்பதை பாரம்பரியம். அதனை கொச்சைப்படுத்தும் விதமாகவும் சாதி போன்ற வார்த்தைகளை சேர்த்து, சாதி வெறியை தூண்டும் விதமாக இசைவாணி பாடி இருக்கிறார். எனவே இசைவாணி மீதும் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பா.ரஞ்சித் மற்றும் அவரது குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதனை தட்டி கேட்டு வீடியோ வெளியிட்ட ஐயப்ப பக்தர் தேனி அருண்குமாரை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும் கைது செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications