காமராஜரையா இழிவா பேசுறீங்க? திமுக ஆட்சியை நிச்சயம் கவிழ்ப்பேன்! திருச்சி வேலுச்சாமி ஆதங்கம்
சென்னை: காமராஜரை தவறாக பேசிய திமுக ஆட்சியை கவிழ்ப்பேன் என காங்கிரஸ் கட்சியை (கூட்டணி) சேர்ந்த திருச்சி வேலுச்சாமி ஆவேசமாக பேசியுள்ளார். இது திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் 3 மாதங்களில் தமிழக சட்டசபைத் தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் தவெக கட்சியும் போட்டியிடுவதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் அவரது கட்சி அதிக இடங்களில் வெல்லுமா இல்லை ஓட்டுக்களை பிரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வேண்டாம் என மக்கள் முடிவு செய்து விட்டதால் தவெக வெற்றி பெறும் என அவரது கட்சியினர் கூறி வருகிறார்கள். மேலும் முதல் தலைமுறை வாக்காளர்களை நம்பி தவெக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு அதிகம் இருப்பதால் திராவிட கட்சிகள் சிந்தாமல் சிதறாமல் வாக்குகளை பெறுவதில் சிக்கல் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் வியூக ஆலோசகர்களில் ஒருவரான பிரவீன் சக்ரவர்த்தி, விஜயை சந்தித்ததாக தகவல் வெளியானது.
இதனால் காங்கிரஸ் கட்சி, தவெகவுடன் கூட்டணிக்குச் செல்லுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேட்ட போது அவரோ, "பிரவீன்- விஜய்யை ஏன் சந்தித்தார் என தெரியவில்லை" என்றார்.
இந்த நிலையில் திருச்சி வேலுச்சாமியோ, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்தார். ஏன் இந்த சந்திப்பு என கேட்ட போது, அவர் என் நண்பர் என்பதால் சந்தித்தேன் என திருச்சி வேலுச்சாமி தெரிவித்திருந்தார். அது போல் திருவாரூரில் நடந்த தமிழக காங்கிரஸ் பிரமுகர் செந்தில்பாண்டியனின் வீட்டு திருமண விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எல்லாம் ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.
அது போல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து திருவாரூர் வரை ஒரே காரில் பயணம் செய்தனர். இப்படி தவெக- காங்கிரஸ் கூட்டணி அமையும் என்பதற்கான நிறைய சம்பவங்கள் நடந்தன.
இந்த நிலையில் திருச்சி வேலுச்சாமி, ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் காமராஜரை விமர்சித்த திமுக எம்பியை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். மேலும் அவர் கூறியிருப்பதாவது "2026ல் திமுக-பாஜக மறைமுக கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும். காங்கிரஸுக்கு தெரியாத விஷயமல்ல. விஜய் இப்போதுதான் வந்தவர் என்றால், உதயநிதி யார்?" என கேள்வி எழுப்பியுள்ளார். இது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications