Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநாவுக்கரசர் MP உருவப்படத்தை அடித்து-உதைத்து போராட்டம்! திருச்சி காங்கிரஸ் அலுவலகத்துக்கு பூட்டு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசரை கண்டித்து காங்கிரஸார் கட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோஷ்டிப்பூசல் புதிதல்ல: காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக திகழும் திருநாவுக்கரசரை காங்கிரஸ் கட்சியினரே கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தியிருப்பதுடன் அவரது உருவப்படத்தை அடித்து, உதைத்து ஆத்திரத்தை தீர்த்துக்கொண்ட நிகழ்வு திருச்சியில் அரங்கேறியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கோஷ்டிப்பூசல் ஒன்றும் புதிதல்ல என்று கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தான் கே.எஸ்.அழகிரி ரொம்ப பெருமையாக சொல்லியிருந்தார். அதற்குள் திருச்சியில் களேபரம் நடந்துள்ளது.

Congress former executive supporters protest against Trichy Parliamentary Constituency Member Thirunavukkarasar

கட்சிப் பதவி நியமனம்: திருநாவுக்கரசருக்கு எதிரான போராட்டம் பற்றி விசாரித்ததில், திருச்சி மாநகர் மாவட்ட கட்சிப் பதவி நியமனம் தான் காரணம் எனக் கூறப்பட்டது. அதாவது திருச்சி மாநகர் மவட்ட காங்கிரஸ் தலைவராக ஜவஹர் என்பவர் இருந்து வந்த நிலையில், ரெக்ஸ் என்பவர் அந்தப் பதவிக்கு புதிதாக நியமிக்கப்பட்டார். திருநாவுக்கரசர் தான், தனது ஆதரவாளருக்காக ஜவஹரிடமிருந்து பதவியை பறிக்க வைத்தார் எனக் கருதிய அவர் தரப்பு இன்று போராட்டத்தில் குதித்தது.

Congress former executive supporters protest against Trichy Parliamentary Constituency Member Thirunavukkarasar

சொந்தக் கட்சியினரே எதிர்ப்பு: திருநாவுக்கரசருக்கு எதிராகவும், ரெக்ஸ்க்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பிய காங்கிரஸார், அருணாச்சல மன்றம் முன்பாக திருநாவுக்கரசர் உருவப்படத்தை அடித்து உதைத்து தங்கள் கோபத்தை கொட்டித் தீர்த்தனர். இதனிடையே திருநாவுக்கரசர் தொண்டர்களை மதிப்பதே கிடையாது என்றும் அதே போல் கட்சியின் சீனியர்களையும் மதிப்பதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் திருச்சியில் போட்டியிட ஆர்வம் காட்டும் திருநாவுக்கரசர், தனக்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Congress former executive supporters protest against Trichy Parliamentary Constituency Member Thirunavukkarasar

திருச்சியில் பரபரப்பு: அண்மையில் திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதிக்கு மக்கள் குறைகளை கேட்கச் சென்ற திருநாவுக்கரசரிடம், உங்களை பார்க்க 20 முறைக்கு மேல் உங்கள் அலுவலகம் வந்தும் நீங்கள் இல்லை என்றும் பிறகு எதற்கு உங்களுக்கு ஓட்டுப்போட்டோம் எனவும் இளைஞர் ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பி திருநாவுக்கரசரை திணற வைத்த நிகழ்வு அரங்கேறியது. இப்போது என்னவென்றால் சொந்தக்கட்சியினரே இப்படி போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை கிளப்பியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+