மோடி - ஸ்டாலின் நெருக்கம்? பிரதமரோட அழுதுகிட்டா பேச முடியும்? என்னங்க இது.. திருநாவுக்கரசர் சுளீர்!
திருச்சி : பிரதமர் மோடி தமிழ்நாட்டு வருகையின்போது முதல்வர் ஸ்டாலின் மிகுந்த நெருக்கம் பாராட்டியது அரசியல் அரங்கில் விவாதங்களைக் கிளப்பிய நிலையில், "முதல்வர் பிரதமரிடம் சிரித்துத்தான் பேச முடியும், பிறகு அழுதுகொண்டா பேசமுடியும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான திருநாவுக்கரசர் திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்திற்கும் கையெழுத்திடாமல் உள்ளார். எனவே தமிழ்நாடு முழுவதும் அணி திரண்டு வந்து ஆளுநரை கண்டித்து நாளை சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது.

இதையடுத்து ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக பாஜகவை கண்டித்து வருகிற 15ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் மாவட்ட அளவிலும், ஒன்றிய அளவிலும் நடைபெற உள்ளது." எனத் தெரிவித்தார் திருநாவுக்கரசர்.
மேலும் பேசிய அவர், "திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் ஒருத்தரை விட்டா ஒருத்தருக்கு வழி கிடையாது என்கிற நிலைதான் உள்ளது. அதிமுகவை விட்டுவிட்டு பாஜக ரோட்டிலா நிற்கும்? காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பாத கட்சிகள் கூட பாஜகவிற்கு எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டு வருகையின்போது முதல்வர் ஸ்டாலின், சிரித்தபடி நெருக்கமாக அளவளாவியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர், "பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போது, முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வேண்டியதை எடுத்துச் சொல்லி பிரதமரிடம் கேட்டிருக்கிறார். தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு எது எதெல்லாம் தேவையோ, தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்காக அவர் பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். அவர் பிரதமரிடம் சிரித்துத்தான் பேச முடியும், பிறகு அழுதுகொண்டா பேசமுடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், மாநிலங்களுக்கு வருகை தரும் பிரதமரை, முதலமைச்சர் புறக்கணிப்பது புத்திசாலித்தனம் இல்லை. அதற்கு பதிலாக அந்த விழாவில் பங்கேற்று மாநிலங்களுக்கு தேவையான நலத்திட்டங்களை பெற்றுக் கொள்வது தான் புத்திசாலித்தனம். அந்த வகையில் தெலுங்கானா முதலமைச்சர் புறக்கணித்தது அவருடைய விருப்பம் எனத் தெரிவித்தார் திருநாவுக்கரசர்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications