மருத்துவர்கள் மீது எச்சில் துப்பிய 7 கொரோனா நோயாளிகள்.. திருச்சியில் பரபரப்பு.. கொலை முயற்சி வழக்கு
திருச்சி: மருத்துவர்கள் மீது எச்சில் துப்பியதாக, கொரோனா நோயாளிகள் 7 பேர் மீது கொலை முயற்சி வழக்கு செய்யப்பட்டது. மேலும் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறும் நபர்கள் மீது முதல் முறையாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Recommended Video
திருச்சி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட திருச்சி மாவட்டத்தினர் 39 பேர், கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தினர் தலா ஒருவர் என மொத்தம் 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வருவோருடன் தொடர்புடைய 165 பேரின் ரத்த மாதிரிகள் பாரிசோதனை செய்யப்பட்டதில் 103 பேருக்கு தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது. இன்னும் 59 நபர்களின் முடிவுகள் இன்னும் வரவில்லை. மாவட்டம் முழுவதும் 30 இடங்கள்முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள ஒருவர், சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து, மருத்துவர்கள் மீது எச்சில் துப்பி, முகக் கவசத்தை வீசியுள்ளார்.
தங்களுக்கு தொற்று ஏற்படும் வகையிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாக மருத்துவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அந்த நபர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல்தடுத்தது. கொரோனா நோயைப் பரப்ப முயன்றது, கொலை முயற்சி செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவரின் தாயாருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அவரைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க எடுக்கப்பட்ட முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு மருத்துவமனை கொரோனா பிரிவில் சிகிச்சை அளிக்க வந்த பெண் மருத்துவர் உள்ளிட்ட 2 மருத்துவர்களிடம் முகக் கவசங்களை வீசி, எச்சில் துப்பியுள்ளனர்.
கொலை முயற்சி, அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தல், பெண்கள் மீதான வன்கொடுமை என 3 பிரிவுகளில் 7 பேர் (கொரோனா தொற்று உறுதியானவர்கள்) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் சனிக்கிழமை இரவு கொரோனா சிகிச்சை பிரிவில் இருந்த திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தப்பி ஓடி, வீட்டிலிருந்து போலீசாரால் அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறும் ஒருவர் மீது முதல் முறையாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற ஈரோட்டு வாலிபர் சிகிச்சை முடிந்து முழு நலமுடன் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவகுழுவினர் கைதட்டி , பூச்செண்டு கொடுத்து வழியனுப்பினர். அவரும் நன்றி பெருக்குடன் விடைபெற்றார். ஆனால், இப்படி சிலர் முரணாக, முரட்டுத்தனமாக நடந்துகொள்வது அச்சத்தையும் வேதனையையும் அளிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.












Click it and Unblock the Notifications