திருச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளருக்கு கொரோனா - ஆர்.டி.ஓ.அலுவலகம் 2 நாட்களுக்கு மூடல்
திருச்சி பிராட்டியூர் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள வாகன போக்குவரத்து ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். திருச்சி மேற்கு வட்டார போ
திருச்சி : திருச்சி பிராட்டியூர் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள வாகன போக்குவரத்து ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா தொற்று பரவியதை அடுத்து திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இரண்டு நாட்கள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் கொரோனா தொற்று தற்போது அரசு எந்திரங்களையும் ஆட்டி வைத்துக்கொண்டிருக்கின்றது. பொதுமக்கள் வந்து செல்லும் இடம் தொட்டு வியாபாரிகள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் என அனைவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றனர். சமூக பரவலில் முதல் கட்டமாகவே இது தோன்றுகின்றது.

திருச்சியில் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே போகின்றது. இதுவரை 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்று பாரபட்சமின்றி பரவி வருகின்றது. திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் உள்ள பணியாற்றும் பெண் போலீஸாருக்கு கொரோனா தொற்று பரவியது. இதையடுத்து அந்த பெண் போலீஸார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
இதையடுத்து கோட்டை காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் இன்று கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. கோட்டை காவல் நிலையத்திலேயே சுகாதாரத்துறையினர் வந்து அனைத்து காவலர்களும் கொரோனா பரிசோதனை நடத்தினார்கள்.இதனால் திருச்சி காவலர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது.
அந்த வகையில் திருச்சி பிராட்டியூர் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள வாகன போக்குவரத்து ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. இதனையடுத்து இன்னும் 2 தினங்களுக்கு அலுவலகத்திற்கு விடுப்பு அறிவிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு அறிக்கை வாசலில் ஒட்டி வைக்கப்பட்டிருக்கின்றது.
இது தெரியாமல் வழக்கம்போல் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவுகளுக்கு வந்த பொதுமக்கள் இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications