விடிய விடிய கொண்டாட்டம்.. கடைசியில் பெட்ரூமில் ஷாக் தந்த தம்பதி.. திருச்சியை கலங்கடிக்கும் சோகம்
திருச்சி: விடிய விடிய பட்டாசு வெடித்துவிட்டு, விடிகாலையில் தூக்கு போட்டு தொங்கியும் விட்டனர் ஒரு முதிய தம்பதியினர்.. இப்படி ஒரு சோகம் திருச்சியில் நடந்துள்ளது.
திருச்சி கிராப்பட்டி சிம்கோ காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் மோகன்தாஸ்.. 70 வயதாகிறது.. ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துவிட்டு, ரிடையவர் ஆனவர். இவரது மனைவி சுமதி.. அவருக்கு 64 வயதாகிறது.
இருவரும் நேற்று தீபாவளி என்பதால், பட்டாசுகளை சேர்ந்து வெடித்தனர்.. மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடி இருக்கிறார்கள். இந்நிலையில், இன்று காலை நெடுநேரமாகியும் அவர்கள் 2 பேருமே ரூமை விட்டு வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவரது மகன் பாலாஜி, கதவை பார்த்தார்.. திறக்கவே இல்லை.. அதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.. அப்போதுதான், மோகன்தாஸ் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி சுமதி சடலமாகவும் விழுந்து கிடப்பதை கண்டு அலறினார்.
இது சம்பந்தமாக திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவும், அவர்கள் விரைந்து வந்து தம்பதியின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விசாரணையும் ஆரம்பமானது.. அப்போதுதான், சுமதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது தெரிவந்தது.
புற்றுநோயால் பல நாட்களாகவே கடுமையான அவதிக்கு உள்ளாகி வந்துள்ளார். அவர் படும் வேதனையை சகிக்க முடியாமல், தற்கொலைக்கு முடிவு செய்துள்ளார் மோகன்தாஸ்.. இறுதியில் இருவருமே தற்கொலை செய்துக்கொள்ள தயாரானார்கள். முன்னதாக ஒரு லெட்டரை எழுதி வைத்துள்ளனர்..
அதில், தங்களது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை... எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை.. எங்களுடைய மகன், மருமகள், பேத்தியை விட்டு செல்வததற்குதான் கஷ்டமாக இருக்கிறது.. அவர்கள் எங்களை காப்பாற்ற நிறைய செலவு செய்தார்கள்" என்பது உட்பட பல விஷயங்களை மோகன்தாஸ் விலாவரியாக எழுதி வைத்திருந்தார்.
இந்த லெட்டரை கைப்பற்றிய போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்... தீபாவளியை கொண்டாடிவிட்டு தம்பதி இருவரும் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications