"301"-ல் விபச்சாரம்.. திடீர்னு நுழைந்த போலீஸ்.. யாரந்த "புள்ளி".. வால்பேப்பர் வேற.. சிக்கியது எப்படி
திருச்சி: லாட்ஜ்ஜில் விபச்சாரம் நடப்பதை அறிந்ததுமே, மிட்நைட் என்றும் பாராமல் உள்ளே நுழைந்துள்ளது போலீஸ்.. சம்பந்தப்பட்டவரையும் சுற்றி வளைத்து கைது செய்துள்ளது.. இதன் பின்னணி தற்போது வெளியாகி உள்ளது. லாட்ஜ் "அறை எண் 301"-ல் விபச்சாரம்.. இரவில் நுழைந்த போலீஸ்.. யாரந்த "புள்ளி".. சிக்கினார் டுபாக்கூர்
திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் ஒரு லாட்ஜ் உள்ளது.. இங்கு 2 நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்.. அன்றைய தினம் இரவு, ஒரு சிறுமியை தன்னுடன் ரூமுக்கு அறைக்கு சென்றிருக்கிறார்.

இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள், கண்டோன்மெண்ட் மகளிர் போலீசக்கு தகவல் தரவும் அவர்கள் லாட்ஜூக்குள் நள்ளிரவு என்றும் பாராமல் நுழைந்து சோதனை மேற்கொண்டனர்..
ரூமுக்குள் அந்த சிறுமியும், இளைஞரும் இருந்தனர்.. அப்போதுதான், அந்த சிறுமியை இளைஞர் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது... இதற்கு பிறகு சிறுமியை தனியாக அழைத்து விசாரித்தனர்.. அவர் சொன்னதை கேட்டு, போலீசார் அதிர்ந்து நின்றுவிட்டார்கள்.. துவாக்குடி பகுதியை சேர்ந்த அந்த சிறுமியின் வயது 17.
மாமியார் சித்ரவதை: தந்தையை இழந்த சிறுமியால் பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை.. அதனால், இவரது தாய், சிறுமிக்கு 15 வயது ஆனபோதே, பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்.. 2 வருடங்களாக சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், அவர் கர்ப்பம் தரிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி சிறுமியை டார்ச்சர் செய்துள்ளார்.. கணவர், மாமியாரின் சித்ரவதைக்கு ஆளான நிலையில், மனம் நொந்துபோன சிறுமி, கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி தன்னுடைய அம்மா வீட்டுக்கு அழுதுகொண்டே வந்துவிட்டார்.. ஆனால், வீட்டில் கடன் தொல்லை இருந்ததால், திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெரு 4-வது குறுக்கு சந்தில் வசித்து வரும் ரமீஜா பானு என்பவரிடம் சிறுமியை வேலைக்கு அனுப்பியிருக்கிறார்..
ரமீஜா பானுவுக்கு 50 வயதாகிறது.. இவர் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருகிறார்.. அதனால் சிறுமியையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். கஸ்டமர்களிடம் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வாங்கிவிடுவாராம் ரமீஜாபானு.. ஆனால், இதில் சிறுமிக்கு ரூ.1,000 மட்டுமே கொடுத்துள்ளார்.. இதனால் சிறுமிக்கு பலமுறை உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது.. உடம்பு சரியில்லை என்று சிறுமி சொன்னாலும், ரமீஜா பானு விடுவதில்லையாம். "உன் வீடியோ என்கிட்ட இருக்கு" என்று மிரட்டி மிரட்டியே அவரை தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்திருக்கிறார்..
லாட்ஜில் சிறுமி: அப்படித்தான், 2 நாட்களுக்கு முன்பு, திருச்சி பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் லாட்ஜில், பிரபின் கிறிஸ்டல்ராஜ் என்பவர் ரூம் போட்டு தங்கியபோது, அவரிடம் சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.. இப்படி அழைத்து சென்றதே, சிறுமியின் அம்மாதான் என்பது தெரியவந்தது.. இறுதியில், பிரபின் கிறிஸ்டல் ராஜ், ரமீஜாபானு, சிறுமியின் தாயார், சிறுமியின் கணவர், மாமியார் என மொத்த பேர் மீதும்போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிரபின் கிறிஸ்டல் ராஜ், ரமீஜாபானு, சிறுமியின் அம்மாவை கைது செய்தனர். சிறுமியை மீட்ட போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காப்பகத்தில் ஒப்படைத்தனர்...
இந்நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர் பிரபின் கிறிஸ்டல்ராஜ் யார்? அவர் எப்படி போலீசில் சிக்கினார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.. அந்த லாட்ஜில் 301-ம் நம்பர் ரூமில்தான் தங்கியுள்ளார் பிரபின் கிறிஸ்டல்ராஜ்.. ரூமுக்குள் நுழைந்ததுமே, சிறுமியிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டு முடித்து, அதற்கு பிறகு, இளைஞரை விசாரித்துள்ளனர்.. போலீசார் விசாரணையை துவங்கியபோதே, தன்னுடைய அப்பாவின் பெயரை சொல்லி, தமிழக காவல்துறையில் உயர்பொறுப்பில் அவர் இருப்பதாகவும் சொல்லி, மிரட்டி உள்ளார் கிறிஸ்டல்ராஜ்.. இதனால் ஒருகணம் போலீசார் அதிர்ந்துள்ளனர்..
விவிஐபிகள்: பிறகு, தன்னுடைய செல்போன் வால்பேப்பரில், அந்த போலீஸ் அதிகாரியின் போட்டோவை வைத்திருப்பதையும் காட்டியிருக்கிறார். அப்போது இளைஞர், "நான் சாதாரண ஆள் கிடையாது.. என்னை பார்த்தாலே எல்லா ஆபீசர்களும் நடுங்குவார்கள் என்று கூறியிருக்கிறார்.. அதுமட்டுமல்லாமல், தன்னுடைய செல்போனில் இருந்த எல்லா விஐபிகளின் செல்போன் நம்பர்களையும் போலீசாரிடம் காட்டியிருக்கிறார்.. இதெல்லாம் பார்த்ததுமே, சற்று குழம்பி போயுள்ளனர் போலீசார்..

அதனால், சம்பந்தப்பட்ட அந்த காவல்துறை உயர் அதிகாரியிடமே விஷயத்தை சொன்னார்கள்.. திருச்சி லாட்ஜில் ஒருவர் இப்படி சிக்கி உள்ளார், அவர் உங்கள் மகன் என்கிறார் என்றதுமே, அந்த அதிகாரியும் அதிர்ந்துவிட்டாராம்.. அந்த இளைஞர் யாரென்றே தனக்கு தெரியாது என்றும் மறுத்திருக்கிறார்.. இதற்கு பிறகுதான் தீவிர விசாரணை இளைஞரிடம் நடத்தப்பட்டுள்ளது.. இவரது உண்மையான அப்பா பெயர் பாக்கியராஜ்.. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் மலையன்விளையை சேர்ந்தவராம்.. இவர்கள் குடும்பத்துக்கும், காவல்துறைக்கும் துளிகூட சம்பந்தம் கிடையாதாம். இந்த விஷயத்திலேயே இளைஞரின் குட்டு வெளிப்பட்டுவிட்டது.
டுபாக்கூர் ரிப்போர்ட்டர்: பிறகு விசாரணையின்போது, தன்னை ஒரு பத்திரிகையாளர் என்றார் போலீசாரிடம்.. எங்கே வேலை பார்க்கிறீர்கள்? அது என்ன பத்திரிகை? என்று கேட்டதற்கு "சிலந்தி வலை" பத்திரிகை என்றாராம்.. இப்படி ஒரு பத்திரிகையை தானே சொந்தமாக நடத்தி வருவதாக சொல்லி உள்ளார்.. கடைசியில்தான் தெரிந்தது, அவர் உண்மையான பத்திரிகையாளர் கிடையாதாம்.. 15 வருடமாக பத்திரிகையாளர் என்ற போர்வையில், ஒரு சில உயர்போலீசாருடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு, புகார்களில் யாராவது பிரபலங்கள் சிக்கினால், அவர்களை மிரட்டி பணம் கறந்து வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.. இந்த டுபாக்கூர் ரிப்போர்ட்டர், ஜெயிலில் இப்போது 1.. 2... 3...!!












Click it and Unblock the Notifications