திருச்சியில் மாமியாரை ஏமாற்றிய மருமகள்.. விஜய் கூட அறிக்கைவிட்டாரே.. குழந்தை விவகாரத்தில் உண்மை என்ன
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்திய பெண் விவகாரத்தில் செய்திகள் வெளியானதன் அடிப்படையில் தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டு அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். ஆனால் இதில் போலீசாரையே தூக்கிவாரிப்போடும் அளவிற்கு புதிய உண்மைகள் வெளியாகி உள்ளது. வேறு ஒரு பெண்ணுக்கு பிறந்த குழந்தையை தன் குழந்தை என்று மீனாட்சி என்ற பெண் நம்ப வைத்ததுடன், மாமியார் குடும்பத்தினரை ஏமாற்ற கர்ப்பிணியை போல் நாடகமாடியது அம்பலமாகி இருக்கிறது.
திருச்சி விவகாரம் தொடர்பாக பார்ப்போம். திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்த விக்னேஷ் என்பவர் பெயிண்டர் ஆக அந்த பகுதியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுகன்யாவுக்கு 23 வயது ஆகிறது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்துக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுகன்யாவுக்கு கடந்த 11-ந்தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு பிரேமா என்ற பெண் உதவியாக இருந்திருக்கிறார்

தடுப்பூசி போடுவதாக கேட்டுள்ளார்
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சுகன்யா அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் இருந்த சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த மீனாட்சி என்பவர் பிரேமாவிடம் குழந்தைக்கு தடுப்பூசி போட டாக்டர் அழைக்கிறார் என்றுள்ளார்கள். மேலும், தானே குழந்தையை தூக்கி சென்று தடுப்பூசி செலுத்திவிட்டு வருவதாக கூறி, குழந்தையை கடத்தி சென்றுளளார்.
செல்போன் சிக்னல்
போலீசார் அதிரடி விசாரணை நடத்தி செல்போன் எண் சிக்னல் மூலம் சேலம் தம்மம்பட்டி பகுதியில் இருந்த மீனாட்சியை கண்டுபிடித்தனர். உடனே போலீசார் அங்கு சென்று, மீனாட்சியை கைது செய்து, கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு கொண்டு வந்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
2வது திருமணம்
குழந்தையை கடத்திய மீனாட்சிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன், மகள் இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக மீனாட்சி கணவரை விட்டு பிரிந்து, தம்மம்பட்டியை சேர்ந்த வாலிபரை 2-வது திருமணம் செய்திருக்கிறார்.. இந்நிலையில் கர்ப்பம் அடைந்த அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டு கருவிலே குழந்தை கலைந்துவிட்டது. ஆனால் இது குறித்து தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் தெரிவிக்காமல் மீனாட்சி ஏமாற்றி வந்திருக்கிறார்.
மீனாட்சி குடும்பத்தினர் மகிழ்ச்சி
இதற்கிடையே மீனாட்சி திருச்சி அரசு மருத்துவமனையில் இருப்பதாக கேள்விப்பட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்துவிட்டனர். அவர்கள் மீனாட்சியை சந்தித்து குழந்தை எங்கே? என கேட்டிருக்கிறார். அதற்கு அவர், ஐ.சி.யு.வில் வைத்து இருப்பதாகவும், இப்போது குழந்தையை பார்க்க முடியாது என்றும் சமாளித்தாராம். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள்ளாத குடும்பத்தினர் குழந்தையை உடனடியாக பார்த்தே ஆக வேண்டும் என்று கூறி உள்ளார்கள். இதற்கு மேலும் தான் மாட்டிக்கொள்வோம் என்று கருதிய மீனாட்சி, அவர்களிடம் நீங்கள் இங்கேயே இருங்கள், நானே சென்று குழந்தையை கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு, பிரேமாவிடம் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்திவிட்டு வருவதாக கூறி வாங்கி சென்றிருக்கிறார். பின்னர் கணவரின் குடும்பத்தினரிடம் தனக்கு பிறந்ததாக கூறி, குழந்தையை காண்பித்திருக்கிறார். குழந்தையை கண்ட அவர்கள் ஆனந்தம் அடைந்தனர்
கண்டுபிடித்த போலீஸ்
பின்னர் மீனாட்சியிடம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டு வரும்படி கூறி உள்ளனர். ஆனால் அவரோ, அதற்கெல்லாம் தாமதமாகும் என்றும், உடனே இப்படியே குழந்தையுடன் சென்றுவிடலாம் என கூறி புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் போலீசார் செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்து குழந்தையை கண்டுபிடித்தனர். குழந்தையை உண்மையான பெற்றோரா சுகன்யா மற்றும் விக்னேஷ் தம்பதியிடம் ஒப்படைத்தனர். இதில் ஒரு விஷயம் மட்டும் அனைவரும் அறிய வேண்டியது. குழந்தையை எவ்வளவு தான் பழகினாலும், பக்கத்தில் உள்ளவர்களிடம் கொடுக்கவே கூடாது. உறவினர்கள், பெற்றோரை தவிர யார் நம்பிக்கையாக பாசமாக பேசினாலும் குழந்தையை ஒப்படைத்து ஏமாற வேண்டாம்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
டான்சர் ராகவா லாரன்ஸ் விஜய்யின் திருச்சி கிழக்கை குறிவைத்து.. ஆண்டிப்பட்டி ஹிஸ்டரி ரிப்பீட் ஆகுமா? -
டாஸ்மாக் ஊழியர்கள் 200 பேர் சஸ்பெண்ட்.. பாட்டிலுக்கு 10 ரூபா ஒழிக்காம விடமாட்டேன்.. விஜயின் சபதம்! -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
"கரண்ட் போனால் என்ன? விஜய்யை கேட்டா வந்துருமா?" என் வீட்டுல இருக்கு! வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன் -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
சென்னையில் பில்டிங் கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. முதல்வர் விஜய் உத்தரவு -
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! 2வது மாதமாக பணத்தை போட்டது தவெக அரசு! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
"விஜய் ஜெயித்ததும் மாறிய கோடம்பாக்கம் அரசியல்?" லாரன்ஸ் சர்ச்சையில் கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன் -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு!












Click it and Unblock the Notifications