அடங்காத மாமியார்.. அபார்ஷன்கள்.. கொடுமைகள்.. 14 இடங்களில் கத்தியால் குத்தி திருச்சியை மிரட்டிய பெண்
மாமியாரை கொன்ற மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர்
திருச்சி: மாமியாரை கொன்ற மருமகளை பற்றிதான் திருச்சி முழுக்க பேச்சாக இருக்கிறது.. இவ்வளவு குரூரமாக அதுவும் டிகிரி படித்த பெண் கொலை செய்வாரா? என்ற அதிர்ச்சியும் எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம் தாராநல்லூர் விஸ்வாஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் இப்ராஹிம்.. மனைவி பெயர் நவீன்.. 46 வயதாகிறது.. இவர்களுக்கு ஆசிம்கான் என்று 28 வயதில் மகன் இருக்கிறார்.
விருத்தாசலத்தில் ஒரு அரிசி ஆலை நடத்தி வருகிறார்... இவரது மனைவி பெயர் ரேஷ்மா.. அவருக்கு 26 வயதாகிறது.. இருவரும் சென்னை கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்..

மனைவி
படிக்கும்போதே காதலித்து திருமணமும் செய்து கொண்டனர்.. இரண்டரை வயதில் மகன் உள்ளான்... ஆசிம்கான் சற்று வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்.. ரேஷ்மா குடும்பம் அந்த அளவுக்கு வசதி இல்லை.. எனினும் மனைவியை நல்ல முறையில் கவனித்து கொண்டார் இப்ராஹிம்.. இவரது அரிசி ஆலை விருதாச்சலத்தில் உள்ளதால், விஸ்வாஸ்நகரில் ரேஷ்மாவை தங்கவைத்துவிட்டு, விருத்தாசலம் அரிசி ஆலைக்கு சென்றுவிடுவார் இப்ராஹிம்.

மாமியார்
ஆனால், இவர்களின் காதல் திருமணத்தை இப்ராஹிம் குடும்பத்தினர் விரும்பவில்லை.. குறிப்பாக, மாமியார் நவீனுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது.. எனவே, மருமகள் ரேஷ்மாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்... இது ரேஷ்மாவுக்கு மனவருத்தத்தை தந்து வந்துள்ளது.. இந்நிலையில் ஆசிம்கான் 2 நாளைக்கு முன்பு வெளியூர் சென்றிருந்தார்.. அந்த நேரம் பார்த்து, மாமியார், கிச்சனில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.. இதில் அவருக்கு தலையில் காயமும் ஏற்பட்டுள்ளது..

ரேஷ்மா
தன்னை தூக்கிவிடும்படி ரேஷ்மாவிடம் மாமியார் சொல்லி உள்ளார், ஆனால் ஏற்கனவே மாமியார் மீது கோபத்தில் இருந்த ரேஷ்மா அவரை எழுந்திருக்க விடவில்லை.. கீழே விழுந்து வலியால் துடிப்பதை பார்த்து கொண்டே நின்றுள்ளார்.. அதுமட்டுமல்ல, கிச்சனில் இருந்த கத்தியை எடுத்து மாமியாரை சரமாரியாக குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மாமியார் கிச்சனிலேயே இறந்துவிட்டார்..

மருமகள்
அப்போதும் ரேஷ்மா அடங்கவில்லை.. உடனே மண்ணெண்ணெய்யை எடுத்து வந்து, மாமியார் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.. இதற்கு பிறகு கியாஸ் கசிந்து அதன்மூலம் தீவிபத்து ஏற்பட்டு, மாமியார் கருகிவிட்டதாக அழுது நாடகமாடி உள்ளார் ரேஷ்மா.. காந்தி மார்க்கெட் போலீசாருக்கு இந்த தகவல் பறந்ததையடுத்து அவர்கள் விரைந்து வந்தனர்... சடலத்தை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அத்துடன், விபத்தில் மரணம் என்று வழக்குப்பதிவு செய்தனர்...

போஸ்ட் மார்ட்டம்
இதற்கு பிறகுதான் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்து அனைத்தையும் மாற்றிவிட்டது.. மாமியார் உடலில் மொத்தம் 14 இடங்களில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததாக ரிப்போர்ட்டில் கூறப்பட்டிருந்தது.. இதன்பிறகு காந்திமார்க்கெட் போலீசார் விசாரணையை ரேஷ்மாவிடம் திருப்பினர்.. துருவி, துருவி விசாரித்தனர்... இறுதியில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

கொலை
பிறகு விபத்து மரணம் என்பது கொலை வழக்கமாக மாற்றப்பட்டு, ரேஷ்மாவையும் கைது செய்தனர்.. அப்போது ரேஷ்மா தந்த வாக்குமூலத்தில் மேலும் பல தகவல்கள் வெளியாகின. "ஆரம்பத்தில் இருந்தே மாமியாருக்கு என்னை பிடிக்கவில்லை.. கணவருடன் நான் சேர்ந்து வாழ்வதும் பிடிக்கவில்லை.. தினமும் என்னை சித்ரவதை செய்து வந்தார். ஏற்கனவே.. 2 முறை அபார்ஷன் செய்துவிட்டேன்.. 3-வது முறையாக ஒரு பிள்ளையை பெற்று எடுக்க அளவுக்கு அதிகமாக கஷ்டப்பட்டேன்..

வாக்குமூலம்
என்னை கணவனுடன் சேரவே விடமாட்டார்.. சம்பவத்தன்று கிச்சனில் தவறி விழுந்தபோது, தூக்கிவிடும்படி கேட்டார்... ஆனால் ஆத்திரத்தில் இருந்த நான், "அப்படியே செத்துடு"ன்னு சொன்னேன்.. உடனே என்னை திட்ட ஆரம்பித்தார்.. அப்போதுதான் நான் ஆத்திரம் அடங்காமல் கத்தியை எடுத்து வந்து பலமுறை குத்தி கொலை செய்தேன்" என்றார்... இதெல்லாம் கேட்டு திருச்சியே உறைந்து போயுள்ளது..!












Click it and Unblock the Notifications