திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீபாவளி பர்ச்சேஸ்... திருச்சியில் 127 இடங்களில் சிசிடிவி கேமரா... கொள்ளையர்களுக்கு கமிஷனர் வர்னிங்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காவல் உதவி மையத்தை மாவட்ட போலீஸ் கமிஷ்னர் லோகநாதன் திறந்து வைத்தார்.

Google Oneindia Tamil News

திருச்சி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி என்.எஸ்.பி சாலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விழாக்கால பொருட்களை வாங்கக் கூட்டம் கூட்டமாகப் படையெடுக்கத் தொடங்கியதை அடுத்துப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தெப்பக்குளம் அருகே காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காவல் கட்டுப்பாட்டு மையத்தைத் திருச்சி மாநகர போலீஸ் கமிஷ்னர் லோகநாதன் திறந்து வைத்தார்.

தீபாவளி பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் ஜவுளிகள் வாங்கவும், பொருட்களை வாங்கவும் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர்.

Deepavali Purchases ... Trichy Commissioner Warning to Robbers

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி என்.எஸ்.பி சாலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விழாக்கால பொருட்களை வாங்கக் கூட்டம் கூட்டமாகப் படையெடுக்கத் தொடங்கியதை அடுத்துப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தெப்பக்குளம் அருகே காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காவல் கட்டுப்பாட்டு மையத்தைத் திருச்சி மாநகர போலீஸ் கமிஷ்னர் லோகநாதன் திறந்து வைத்தார்.

இதில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாநகர போலீஸ் கமிஷ்னர் லோகநாதன், திருச்சி என்.எஸ்.பி சாலை,பெரிய கடை வீதி,சிங்காரத்தோப்பு உட்பட மொத்தம் 8 இடங்களில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

என்.எஸ்.பி சாலையில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதோடு சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் பொது அறிவிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுக் குற்றச்சம்பங்களைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கட்டி அணைத்தல், துரத்துதல்.. முகம் சுளிக்க வைக்கும் ப்ரீவெட்டிங் புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல் கட்டி அணைத்தல், துரத்துதல்.. முகம் சுளிக்க வைக்கும் ப்ரீவெட்டிங் புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்

கண்காணிப்பு பணிகளை எளிமைப்படுத்த என்.எஸ்.பி சாலை,சத்திரம் பேருந்து நிலையம், சிங்காரத்தோப்பு, பெரிய கடை வீதி என மொத்தம் 127 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபடுபவர்களைவிடக் கூடுதலாக நூறு குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியமர்த்தப்பட்டுள்ளனர்,இவர்கள் கூட்டத்தில் திருட்டு,வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

English summary
A police assistance center has been set up near Theppakulam for security reasons following the influx of thousands of people on Trichy NSP Road to buy festive items ahead of the Deepavali festival. The new police control center was inaugurated by Trichy Commissioner Loganathan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X