பெட்ரூமில் "அது" எதுக்கு.. பிரியமான மனைவி பிரியா.. பீரோ கைப்பிடியில் அந்தம்மா.. வெலவெலக்க வைத்த கணவர்
மனைவி மீதுள்ள சந்தேகத்தினால் கணவர் உட்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
திருச்சி: பீரோ கைப்பிடியில் அம்மாவும், கதவின் பின்புற கொக்கியில் மகனும், ஃபேனில் சாமிநாதனும், சடலமாக தொங்கி கொண்டிருந்தார்கள்.. ஒரே ரூமில் 3 பேரின் சடலங்களும் தனித்தனியாக கிடந்துள்ளன. இந்த சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.
திருச்சி திருவானைக்கோவில் நடுகொண்டையம் பேட்டை அகிலா நகர் பகுதியில் சேர்ந்தவர் கார்த்திகேயன்.. 35 வயதாகிறது.. இவரது மனைவி வசந்த பிரியா.. 30 வயதாகிறது.
வசந்த பிரியாவும் அதே பகுதியை சேர்ந்தவர்தான்.. வேற்று சமூகத்தை சேர்ந்தவர்.. இவர்கள் இருவருமே உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது... இவர்களக்கு சாமிநாதன் என்று 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

தாறுமாறு தகவல்
கார்த்திகேயன் வெளிநாட்டில் பணியாற்றி வந்துள்ளார்.. கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் வெளிநாட்டில் இருந்து திருச்சிக்கு வந்துள்ளார்.. ஊருக்கு அவர் வந்ததும் வராததுமாக, மனைவி வசந்த பிரியா பற்றி, "தாறுமாறான" தகவல்களை அங்குள்ளவர்கள் சொல்லி உள்ளதாக தெரிகிறது.. இதையெல்லாம் கேட்டு கார்த்திக்கேயன் மனமுடைந்து போய்விட்டார்.. திருச்சி வந்ததில் இருந்தே கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகி வந்ததாக தெரிகிறது.. முக்கியமாக, வெளிநாட்டில் இருந்து வந்த அவர், வெளியே எங்கேயுமே போகவில்லையாம்.. மனைவி பற்றின விஷயத்தையெல்லாம் கேள்விப்பட்டு, வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தாராம்.

தாழ்ப்பாள்
இந்நிலையில், கார்த்திகேயன் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதால், அவரை பார்க்க உறவினர்கள் வந்துள்ளனர்.. நேற்று முன்தினம் இரவு, 8.30 மணியளவில் இவர்கள் வந்திருக்கிறார்கள்.. ஆனால், கார்த்திகேயனின் வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.. அதனால், கதவை தட்டியும் யாரும் கதவு திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது, கார்த்திகேயன், 8 வயது மகன் சாமிநாதன் மற்றும் கார்த்திகேயனின் அம்மா வசந்தா (68) ஆகிய 3 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு கிடப்பதை பார்த்து அலறினார்கள்..

ஷேம் ஷேம்
உடனடியாக போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டது. ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரின் சடலங்களை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையையும் துவக்கினர்.. அப்போது, தற்கொலைக்கான காரணம் குறித்து கார்த்திக்கேயன் பரபரப்பு கடிதம் எழுதி வைத்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இவர்கள் 3 பேருமே தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் வசந்த பிரியா வீட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

வசந்தப்பிரியா
அந்த கடிதத்தில், "என்னுடைய சாவுக்கு யாரும் காரணமில்லை... எனக்கு பிறகு என்னுடைய அம்மாவும், மகனும் ரொம்ப கஷ்டப்படுவார்கள் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன்... மனைவி படித்திருப்பதால் அவரது வாழ்க்கையை அவர் பார்த்துக் கொள்வார்" என்றும் கார்த்திகேயன் எழுதி வைத்திருந்தார். சம்பவத்தன்று, வழக்கம்போல் காலை கார்த்திக்கேயன், வசந்தபிரியாவை வேலைக்கு அழைத்து சென்று விட்டுள்ளார். மதியத்திற்கு பிறகு வசந்தபிரியா போனில் அழைத்தும் யாரும் எடுக்கவில்லை.. அதனால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் சொல்லி இருக்கிறார்.

பீரோ கைப்பிடி
அவர்களும், வீட்டை பார்த்துவிட்டு, கதவு மூடப்பட்டிருப்பதாக வசந்த பிரியாவுக்கு தகவல்சொல்லி உள்ளார்கள்.. போனில் அழைத்தும், கதவை தட்டியும் எவ்வித பதிலும் இல்லாததால் பதற்றமடைந்த அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும் ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதற்கு பிறகுதான் போலீசார் உள்ளே சென்றுள்ளனர்.. கார்த்திகேயன் ஃபேனில் தூக்கு போட்டு தொங்கி உள்ளார்.. அவரது கழுத்து மற்றும் 2 கைகளின் மணிக்கட்டு அறுக்கப்பட்டிருந்ததாம்.. கார்த்திகேயனின் அம்மா வசந்தா, பீரோ கைப்பிடியிலும், கதவின் பின்புற கொக்கியில் சாமிநாதனும் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர்..

அறுந்த மணிக்கட்டு
ஆளுக்கு ஒருபக்கம் தூக்கில் தொங்கிய நிலையில், போலீசார் சடலங்களை கைப்பற்றி உள்ளனர்.. அம்மா வசந்தாவையும், மகன் சாமிநாதனையும் தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு, அதற்கு பிறகு, கார்த்திக்கேயன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த, 5 வருடங்களாகத்தான், துபாயில் கார் டிரைவராக கார்த்திக்கேயன் வேலை பார்த்து வருகிறாராம்.. மனைவி மீது கொள்ளை பிரியமாம்.. ஆனால், அவரை தொடர்ச்சியாக கண்காணித்து கொண்டேயிருப்பாராம்.. வெளிநாட்டில் வேலை செய்தாலும், மனைவி வீட்டில் என்ன செய்கிறார்? என்பதை பார்க்க, பெட்ரூம் உட்பட எல்லா இடங்களிலுமே சிசிடிவி கேமராவை பொருத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது...

பெட்ரூமுக்குள்
இப்படி சந்தேக கண்ணோடு கணவன் இருப்பதை வசந்தபிரியா பலமுறை கண்டித்துள்ளார்... பெட்ரூமில் கூட கேமரா வைக்க வேண்டுமா? என்று கேட்டுள்ளார்? இதன் காரணமாக, 3 நாட்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பிய பிறகும்கூட தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் கார்த்திகேயனிடம் மனைவி பற்றியும் பலவாறாக சொல்லி உள்ளதாக தெரிகிறது.. ஏற்கனவே மனைவிபற்றி, சந்தேகப்புத்தி மண்டை நிறைய உள்ள நிலையில், பல ஏடாகூட தகவல்கள் காதில் வந்து விழுந்ததால், இப்படி ஒரு முடிவை கார்த்திகேயன் எடுத்துள்ளார்..!!
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications