அப்பளம் போல் நொறுங்கிய கார்... பாரிதாபமாக உயிரிழந்த முன்னணி நாளிதழின் இளம் நிருபர்..!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: முன்னணி நாளிதழ் ஒன்றின் திருச்சி மாவட்ட புகைப்பட செய்தியாளராக பணியாற்றிய கோபி என்பவர், விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இளம் நிருபர் கோபி உயிரிழப்புக்கு விபத்து தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து சிறுகனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பத்திரிகையாளர் கோபி பயணித்த கார் அண்மையில் தான் புதிதாக வாங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், கார் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் என்ன என ஆராயப்பட்டு வருகிறது.

செய்தியாளர்

செய்தியாளர்

தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி சக்தி நகரைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா் எருக்கன். இவரது மகன் கோபி என்பவர், தினமணி நாளிதழ் திருச்சி பதிப்பில் புகைப்பட செய்தியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் தனது நண்பரான திருச்சி வயலூா் சாலையை சோ்ந்த செந்தில்குமாருடன் காரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தார்.

அப்பளம் போல்

அப்பளம் போல்

அப்போது திருச்சி சிறுகனூா் அருகே வந்த போது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிா் பாராதவிதமாக சாலையோரமிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் அப்பளம் போல் உருக்குலைந்ததால் அதில் பயணித்த கோபியும், செந்தில்குமாரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

விசாரணை

விசாரணை

இது குறித்து தகவலறிந்து சென்ற சிறுகனூா் காவல் நிலையத்தினா், விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த நிருபர் கோபிக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இரங்கல்

இரங்கல்

இவரது மறைவிற்கு திருச்சி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் இரங்கல் தெரிவித்ததோடு அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் பணியில் இருந்த போது மரணம் மற்றும் விபத்து ஏற்பட்டால் அரசு வழங்கும் உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு வைத்துள்ளனர். இளம் நிருபர் ஒருவர் விபத்தில் மறைந்த நிகழ்வு திருச்சி மாவட்ட பத்திரிகையாளர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+