பீகார் போல் விட்டுவிடக் கூடாது.. வாக்காளர் பட்டியலில் கவனம் ரொம்ப முக்கியம்.. கே.என்.நேரு அட்வைஸ்!
திருச்சி: பீகார் போல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடக் கூடாது என்று திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒன்றியச் செயலாளர்கள் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ள அவர், வாக்காளர் பட்டியலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.
அண்மையில் பீகார் மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்றது. அதன்படி, பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்குக் குடி பெயர்ந்தவர்கள் பெயர் அங்குள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்த மாநிலத்தில் எந்த தொகுதியில் வசிக்கிறார்களோ, அங்கு அவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த கணக்கின்படி பார்த்தால், சுமார் 6.5 லட்சம் பீகார் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் பணி செய்து வருகிறார்கள். இவர்களின் பெயர்கள் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால், இனி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். சென்னையில் மட்டும் 3.5 லட்சம் பீகார் வாக்காளர்கள் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் அதிகளவில் இருப்பார்கள். இதனால் வெளிமாநில வாக்காளர்கள் அதிகளவில் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டால், அது தமிழ்நாட்டின் அரசியலிலேயே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பெறும் வேட்பாளர்களின் வெற்றி, வடமாநில வாக்காளர்களால் மாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் வீடற்றவர்களுக்கு 0 என்ற பதிவெண் அளிக்கப்பட்டு பீகார் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதேபோல் வாக்காளரின் புகைப்படம் இருக்கும் இடத்தில் அவெஞ்சர்ஸ் படத்தின் தானோஸ் படம் வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் இந்தியா முழுவதும் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்னும் 7 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் இம்முறை திமுகவினர் வாக்காளர் பட்டியல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், பீகார் போல் வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தாமல் விட்டுவிடக் கூடாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய செயலாளர்கள் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். வாக்காளர் பட்டியலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் பூத் கமிட்டி நிர்வாகிகள் இம்முறை வாக்காளர் பட்டியலில் தீவிர கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications