திருச்சியில் இருந்து.. பெங்களூரு, சென்னை செல்லும் விமானங்கள் திடீர் ரத்து.. என்ன காரணம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சா்வதேச விமானங்களைத் தொடா்ந்து, திருச்சியில் இருந்து சென்னை, பெங்களூா் பகுதிகளுக்கு இயக்கப்படும் உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த விமானங்கள் தொழில் நுட்பக் காரணங்களால் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் அச்சம்

உலக நாடுகள் அச்சம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்ட அளவில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு நமது நாட்டு மக்களை மட்டுமின்றி, உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்தியுள்ளன. இதனால் பல நாடுகள் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று தங்கள் நாட்டு மக்களை அறிவுறுத்தி உள்ளன.

விமான சேவை ரத்து

விமான சேவை ரத்து

இந்தியாவுக்கு நேரடி விமான சேவைகளை பல நாடுகள் ரத்து செய்துள்ளன. கொரோனாவால் வளைகுடா மற்றும் மலேசியா நாடுகளுக்கு இயக்கப்படும் விமானப் போக்குவரத்தை அந்நாட்டு அரசுகள் தடைசெய்துள்ளன. துபாயில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் வரும் வகையில் மட்டும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

திருச்சி விமான நிலையம்

திருச்சி விமான நிலையம்

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் சென்னை, பெங்களூரு போன்ற உள்நாட்டு பகுதிகளுக்கு மாலை நேர விமானச் சேவைகள் மட்டும் இருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக போதுமான பயணிகள் இல்லாததால் திங்கள்கிழமை காலை 11 மணி மற்றும் இரவு 9. 15-க்கு சென்னைக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

2-வது நாளாக ரத்து

2-வது நாளாக ரத்து

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை சென்னை - திருச்சி - சென்னை இடையே, பகல் மற்றும் இரவு நேரங்களில் இயக்கப்படும் 2 விமான சேவைகளும், மாலை நேரத்தில் பெங்களூருக்கு இயக்கப்படும் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டன. ஆனால் இந்த விமானங்கள் தொழில் நுட்பக் காரணங்களால் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+