திருச்சியிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை! துரை வைகோ சொன்ன "குட் நியூஸ்"
திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமாருடன் துரை வைகோ எம். பி., ஆலோசனை செய்தார். இதில் திருச்சியிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் திருச்சி பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, விமான நிலைய இயக்குனர், மாவட்ட துணை ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர், தேசிய நெடுஞ்சாலைகள் துறை கோட்ட பொறியாளர், கிழக்கு பகுதி வட்டாட்சியர், கிராம புற நெடுஞ்சாலை உதவி இயக்குனர், துணை வட்டாட்சியர் (நிலம் கையகப்படுத்துதல்), விமான நிலைய வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

கடந்த 1-ம் தேதி மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, எம்பிக்கள் கே.என்.அருண் நேரு, ஜோதிமணி, முரசொலி ஆகியோருடன் நேரில் சந்தித்து திருச்சி விமான நிலைய சேவைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம்.
அதன்படி கூடுதல் விமான சேவைகள், அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவதற்கு ஓடுதள பாதை விரிவாக்கம், இரு தரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் படி திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை வழங்க சில மாற்றங்களை செய்ய வேண்டியது குறித்தும், திருச்சியில் இருந்து புதுதில்லிக்கு நேரடி விமான சேவை போன்ற செயல் திட்ட பணிகள் குறித்தும், தாம் முன்னெடுக்கும் பணிகளுக்கு அனைவரது பங்களிப்பு குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. ரூ 1112 கோடி செலவில் உருவக்கப்பட்டது. புதிய முனையத்தில் 60 வருகை கவுன்ட்டர்கள், 44 புறப்பாடு கவுன்ட்டர்கள் என மொத்தம் 104 நுழைவு கவுன்ட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

75 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் ஆண்டுக்கு 44.50 லட்சம் பயணிகளை கையாள முடியும். ஒரு மணி நேரத்தில் 3,480 பயணிகளை கையாள முடியும். பயணிகளுக்கும் பயணிகளுடன் வருவோருக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய முனையத்தில் 10 ஏரோ பிரிட்ஜ்கள் பயன்படுத்தப்படவுள்ளன. தற்போது 5 ஏரோ பிரிட்ஜ்களை பயன்படுத்தப்படுகிறது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 17.60 லட்சம் பயணிகள் கையாளப்பட்டனர். இவர்களில் 13.50 லட்சம் பேர் சர்வதேச பயணிகள்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications