Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி கொடுத்த மெகா டார்க்கெட்..சுத்தி எல்லாம் பெரிய புள்ளி..! பக்கா ஸ்கெட்ச் போட்ட சி.விஜயபாஸ்கர்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான சி.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் மற்ற தொகுதி பொறுப்பாளர்களை விட விஜயபாஸ்கருக்கு தான் கூடுதல் சுமை ஏற்பட்டிருக்கிறது எனக் கூறுகின்றனர் அதிமுகவினர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் இறுதிக்கட்ட திட்டங்களைச் செயல்படுத்தி வாக்குகளை அறுவடை செய்ய தயாராகி வருகின்றனர்.

Edappadi Palaniswami gave a big task to former AIADMK minister C Vijayabaskar in Trichy constituency


கொளுத்தும் வெயில் காரணமாக கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது நேரமின்மை காரணமாக தொகுதியின் எல்லா பகுதிகளையும் கவர் செய்து விட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக பொறுப்பாளர்கள்: அதிமுக போட்டியிடும் ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான சி.விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் மற்ற பொறுப்பாளர்களை விட விஜயபாஸ்கருக்கு தான் கூடுதல் சுமை ஏற்பட்டிருக்கிறது எனக் கூறுகின்றனர் அதிமுகவினர். காரணம் ஒவ்வொரு குறிக்கும் நியமனம் செய்யப்பட்டிருக்கும் பொறுப்பாளர்கள் ஒரு தொகுதியை மட்டுமே கவனிக்க வேண்டியிருக்கிறது.

சி.விஜயபாஸ்கர்: ஆனால் சி.விஜயபாஸ்கருக்கு 4 தொகுதிகளை கவனிக்க வேண்டியிருக்கிறது எனக் கூறுகின்றனர் அதிமுகவினர். விஜயபாஸ்கர் கவனிக்க வேண்டிய தொகுதிக நட்சத்திர வேட்பாளர்கள் தான் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் தனித்தனியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தாலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் இருக்கும் அனைத்து தொகுதிகளிலும் சி.விஜயபாஸ்கரே களத்தில் இறங்கி பணியாற்றி வருவதாக கூறும் அதிமுகவினர், திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளரான கருப்பையாவை தானே பரிந்துரைத்து களத்தில் இறக்கி விஜயபாஸ்கர் அந்த தொகுதி மட்டுமல்லாது மற்ற தொகுதிகளையும் சேர்த்து கவனித்து வருகிறார்.

மெகா டாஸ்க்: திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரான கருப்பையா சிறு வயதிலிருந்து அரசியலில் ஈடுபாடு கொண்டவர். மேலும் அறக்கட்டளை மூலம் மாணவர்களை படிக்க வைப்பது, கல்விக்கு நிதி உதவி , விளையாட்டு போட்டிகள் நடத்துவது மேலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது என பல்வேறு சேவைகளை செய்து வந்ததாக கூறும் அதிமுகவினர், சி.விஜயபாஸ்கரின் பரிந்துரையின் பெயரில்தான் கருப்பையா திருச்சி தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவரை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டுமென சி.விஜயபாஸ்கர் தீவிரமாக முயற்சித்து வருவதாக கூறுகின்றனர்.

4 தொகுதிகள்: மேலும் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருவெறும்பூர் உள்ளிட்ட தொகுதிகள் வருகிறது. இந்த எம்பி தொகுதிக்குள் அனைத்து பகுதிகளிலும் விஜயபாஸ்கர் தீவிரமாக வேட்பாளர் கருப்பையா உடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

நட்சத்திர வேட்பாளர்கள்: அது மட்டுமல்லாமல் விஜயபாஸ்கர் கட்டுபாட்டில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி, கரூர் நாடாளுமன்ற தொகுதி, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி, சிவகங்கை சட்டமன்ற தொகுதி ஆகியவை வருகின்றன. இதில் கரூர் தொகுதியில் ஜோதி மணியும் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவின் பலம் பொருந்திய நபராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சுயேட்சையாகவும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ் கனியும் போட்டியிடுகின்றனர். இதேபோல சிவகங்கை மாவட்டத்தில் தேசிய அளவில் அறிமுகம் பெற்ற நபரான கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.

வெற்றி கிடைக்குமா?: இப்படி புதுக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றியுள்ள நான்கு நாடாளுமன்ற தொகுதிகளையும் சேர்த்து கவனிக்க வேண்டியிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அந்த பொறுப்பை விஜயபாஸ்கர் இடம் கொடுத்திருக்கிறார். அதற்கேற்றார் போல் தேர்தல் பிரச்சார யுக்திகளை மேற்கொண்டு வருவதாக கூறுகின்றனர் அதிமுக தொண்டர்கள். மேலும் ஜல்லிக்கட்டு உள்ளிட்டவற்றில் ஆர்வம் கொண்டவராக இருப்பதால் விஜயபாஸ்கர் செல்லும் இடங்களில் ஜல்லிக்கட்டு காளைகள் மாட்டு வண்டி பந்தயங்கள் ஆகியவற்றை வைத்து வரவேற்பு கொடுக்கின்றனர் உள்ளூர் அதிமுகவினர். நான்கு நாடாளுமன்ற தொகுதிகளின் பொறுப்பை ஏற்றிருக்கும் விஜயபாஸ்கர் வெற்றிகரமாக அதனை முடித்து தருவாரா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+