Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டணியை கெடுத்துடாதீங்க.. தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசனை கும்பிட்டு எடப்பாடி சொன்ன வார்த்தை!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ‛‛கூட்டணி தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். பெரிசா பேட்டி எல்லாம்கொடுத்து கூட்டணியை கெடுத்துவிடாதீர்கள் என்று என்னையையும், தங்கமணியையும் பார்த்து எடப்பாடி பழனிச்சாமி கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொண்டார்'', என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.

தமிழகத்தில் 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது.

dindigul srinivasan aiadmk edappadi palaniswamy

குறிப்பாக அந்த கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார்.

தற்போது திமுக ஆட்சியில் உள்ளது. இதனால் வரும் தேர்தலில் ஆளும் கட்சி மீதான அதிருப்தி ஓட்டுகளை அறுவடை செய்ய முடியும் என்று எடப்பாடி பழனிச்சாமி நம்புகிறார். அதோடு வலுவான கூட்டணி அமைத்தால் நிச்சயம் திமுகவை வீழ்த்தலாம் என்பதால் அதற்கான முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே தான் இன்னும் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மாநிலம் முழுவதும் கட்சியை பலப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளார். அதன்படி மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாவட்ட வாரியாக பயணித்து நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்டு வருகிறது.

அதன்படி திருச்சி மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று பேசியிருப்பது தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இந்த கூட்டத்தில் கூட்டணிக்கு வரும் கட்சிகள் பற்றிய அவர் பேசியதாவது:

"கூட்டணி தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். தங்கமணி, என்னை எடப்பாடி அழைத்து பெரிசா பேட்டி எல்லாம் கொடுத்து கூட்டணியை கெடுத்துபுடாதீங்க என்று கூறினார். அதற்கு நான் நாங்கள் என்ன கெடுக்கப் போகிறோம். கூட்டணி வந்தால் நல்லதுதானே என்று சொன்னேன். அதற்கு நீங்கள் யாரையாவது திட்டிவிட்டு வந்துவிடுவீர்கள். அவங்க கோபித்து விடுகிறார்கள். பிறகு அவர்கள் என்னிடம் வந்து உங்க ஆள் இப்படி பேசிவிட்டார் என்று சொல்கிறார்கள்.

அண்ணா கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் என அவர் கையெடுத்துக் கும்பிடுகிறார். இது ஏங்க வம்பு. இப்போது நாங்க நிருபர்களையே பார்க்கமாட்டோம். இப்போது வரும்போது கூட மைக்கை நீட்டுறாங்க.. வணக்கம் அய்யா வணக்கம் அய்யா என்று வந்தோம். அவங்களுக்கு பரபரப்பா சொல்லணும். அவங்களுக்கு செய்தி வரணும். ஆனால் இங்க நாங்க சொன்னால் எங்களை கட்சியை விட்டு நீக்கி விடுவார் எடப்பாடி. அதனால் நமக்கு எதற்கு வம்பு என்று நான் பத்திரிகையாளர்களையே சந்திப்பது இல்லை'' என்று கூறினார். இந்த வேளையில் மேடையில் இருந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்பட அனைத்து நிர்வாகிகளும் சிரித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+