திருச்சியில் மஞ்சு வாரியரை மடக்கிய பறக்கும் படை.. ரெய்டுக்கு இடையே ரசிகர்கள் செய்ததுதான் ஹைலைட்
திருச்சி: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில், திருச்சி அருகே பிரபல நடிகை மஞ்சு வாரியார் வந்த காரை மடக்கி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தமிழகத்தில் முதல் கட்ட தேர்தலிலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதாவது வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சியின் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். இதற்காக நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களை மறித்து சோதனை நடைபெற்று வருகிறது.
கேரள பதிவு எண் கொண்ட கார்: வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், பரிசு பொருள் எதுவும் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க கார் உள்ளிட்ட வாகனங்களை தீவிர பரிசோதனை செய்து வருகிறார்கள். அந்த வகையில், திருச்சி- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் நகர் என்ற பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தார்கள்.
மஞ்சு வாரியரை சூழ்ந்த ரசிகர்கள்: தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களை மடக்கி பணம், பரிசு பொருள் எதுவும் கொண்டு செல்லப்படுகிறதா? என சோதனை நடைபெற்று வந்தது. அப்போது கேரள மாநில பதிவெண் கொண்ட கருப்பு நிற சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை மடக்கிய பறக்கும் படை அதிகாரிகள், காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காரை ஓட்டி வந்தவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் என்பது தெரியவந்தது. நடிகை மஞ்சு வாரியர் காருக்குள் இருப்பது தெரிந்ததும், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, மஞ்சுவாரியாரிடம் செல்பி எடுக்க ஆரம்பித்தனர்.
வாகன நெரிசல்: இதனால், நெடுஞ்சாலையில், வாகன நெரிசல் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. இதனால், அவசர அவசராக சோதனை நடத்திய பறக்கும் படை அதிகாரிகள், காருக்குள் எதுவும் இல்லை என்பது தெரிந்தவுடன் மஞ்சு வாரியாரை செல்ல அனுமதித்தனர். இதையடுத்து, அங்கு கூட ஆரம்பித்த ரசிகர்கள் கலைந்து சென்றனர்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித்துடன் துணிவு மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் ஆகிய படங்களில் நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக உள்ளார்.
ரூ.4 கோடி பறிமுதல்: தேர்தலுக்கு சரியாக இன்னும் 12 நாட்களே இருப்பதால் தேர்தல் களம் இறுதி கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இதனால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். ரொக்கமாக ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
நேற்று கூட தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து உரிய ஆவணங்களின்றி நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்ல முயன்ற ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ் உள்ளிட்ட 3 பேரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் வெளியாகி உள்ளது.
ப்ளூ டைமண்ட் ஹோட்டல்: நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள் பணத்தை எடுத்துச் சென்று உள்ளனர். கணக்கில் வராத இந்த பணத்தை எடுத்து சென்ற போது போலீஸ் சோதனையில் சிக்கியது.
பிடிபட்ட பணம் தொடர்பாக வருமான வரித்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை சோதனை தீவிரம் அடைந்து உள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications