NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது?
திருச்சி: இன்று திருச்சியில் நடக்கும் என்டிஏ பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார். கூட்டத்திற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டிருக்கின்றன. கூட்டணி கட்சி தலைவர்களின் படங்கள் பெரிய அளவில் பேனர்களாக வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த பேனர்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படம் மட்டும் மிஸ்ஸாகியிருக்கிறது.
என்டிஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியின் படம் மிஸ்ஸாகியிருப்பதை, ஏற்பாட்டாளர்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக vs என்டிஏ கூட்டணி என்கிற சூழல் நிலவி வருகிறது. இது தவிர சீமான், விஜய் உள்ளிட்டோர் களத்தில் இருக்கின்றனர். ஆனாலும் போட்டி என்பது திமுக vs என்டிஏ என்றுதான் இருக்கிறது. எனவே என்டிஏ வாக்குவங்கியை அதிகரிக்க, பாஜக தொடர்ந்து தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இப்படி இருக்கையில், இன்று திருச்சியில் என்டிஏ பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிறார்.
ஆனால், கூட்டத்திற்கான ஏற்பாடுகளில் வழக்கமாக என்டிஏ கூட்டணி சொதப்பி வருகிறது. கடந்த முறை இதே போன்ற கூட்டத்தில் முதலில் பெரியார் படம் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த படம் நீக்கப்பட்டது. தற்போது அதனை தொடர்ந்து, இன்றும் பஞ்சாயத்தாகியிருக்கிறது.
அதாவது கூட்டத்தின் வரவேற்பு வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் நரேந்திர மோடி தொடங்கி, அமித்ஷா, நயினார் நாகேந்திரன், எல்.முருகன், அன்புமணி, டிடிவி தினகரன், ஜிகே வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன் என அனைவரின் படமும் இருக்கையில், எடப்பாடியின் படம் மட்டும் மிஸ்ஸிங்.
கூட்டம் இன்னும் கொஞ்ச நேரத்தில் தொடங்க இருக்கிறது. முன்னதாக பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி உடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். மோடியும் இன்னும் சற்று நேரத்தில் திருச்சி வந்துவிடுவார். இந்த சமயத்தில் எடப்பாடியின் படம் இல்லாதது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications