சரத்குமார் ஒரே போடு.. விசுக்குனு பார்த்த பாஜக.. "அதென்ன, எல்லாத்துக்கும் நடிகர்களா?.. திணறிய திருச்சி
திருச்சி: ஒரே நாடு ஒரே தேர்தல் என்று மட்டும் சொல்கிறார்கள்.. ஆனால், ஒரே நாட்டிற்குள் இருக்கும், காவிரி பிரச்சனையை மட்டும் தீர்க்க முடியாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் பேசும்போது, "தமிழகத்தில் விவசாய சாகுபடிக்கு நீர்வரத்து தேவையாக இருக்கிறது. சுப்ரீம்கோர்ட்டில் உத்தரவு இருந்தும்கூட, கர்நாடக மாநிலம் தண்ணீர் தராமல் இழுத்தடிக்கிறது.

மத்திய அரசு: அங்கே சாதகமான அரசு இருந்தாலும் தண்ணீர் தருவதாக இல்லை... ஒரு நாட்டுக்குள் இந்த பிரச்சினையை ஏன் தீர்க்க முடியவில்லை என்பதுதான் கேள்வி. இதில் மத்திய அரசு தலையிட்டு தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும்.. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறார்களே.. அந்த ஒரே நாட்டில் இப்படியான பிரச்சினைகள் வருவது வேடிக்கையாக உள்ளது" என்றார்.
உடனே செய்தியாளர்கள், காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் நடிகர்கள் ஒன்றிணைந்து போராடுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் அப்படியான சூழல் இல்லையே? என்று கேட்டார்கள்.
நடிகர்கள்: அதற்கு சரத்குமார், நடிகர்கள்தான் எல்லாவற்றையும் தீர்க்க வேண்டியதில்லையே.. இது மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு. இன்று பான் இந்தியா சினிமாக்கள் உருவாகி, எல்லா துறையினருமே கலந்து நடிக்கிறார்கள்... நடிகர்கள் இப்போது எல்லா மாநிலங்களுக்கும் சென்று நடித்து வருகிறார்கள். எனவே அவர்கள் தான் இந்த விவகாரத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று இல்லை.
கர்நாடகத்தில் உள்ள நடிகர்கள் நிர்பந்தத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.ஆனால் எல்லோரும் அப்படி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று இல்லை... கலைஞனுக்கு அழுத்தம் தரக் கூடாது என்று நினைப்பவன் நான். மிகப்பெரிய அளவில் பிரச்சினை ஏற்பட்டு, நீதிமன்றம், மத்திய அரசு கைவிட்டு சூழல் பெரிதாகும்போது வேண்டுமானால், உரிமைக்காக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவார்கள்.
ஆட்சியாளர்கள்: காவிரி பிரச்சனையை சரி செய்ய வேண்டியது அரசு தான். தண்ணீர் இருக்கும்போது மட்டும் கர்நாடகா அரசு திறந்து விட்டு விடுகிறார்கள். ஆனால் முறைப்படி தண்ணீர் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும் சொன்னால், உடனே தர மறுக்கிறார்கள்.. இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு சாதகமான அரசு, கர்நாடகத்தில் இருந்தாலும்கூட, அவர்கள் தண்ணீர் கொடுப்பதாக இல்லை.
வரப்போகும் தேர்தலை பொறுத்தவரை, 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கியே, நாங்கள் அதிகம் பயணிக்கிறோம். அதற்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் குறித்து வருகிற டிசம்பர் 9-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் எங்களுடைய கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் சேர்ந்து முடிவை அறிவிப்பார்கள்.. தேர்தல் சூடு பிடிக்க இன்னும் ஒன்று அல்லது 2 மாதங்கள் ஆகலாம்.. அதனால், பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்... பாராளுமன்ற தேர்தல் எப்படியும், பண நாயகமாக தான் இருக்கும்.
100 கோடி: எம்பி தேர்தலில் நின்றால் ரூ.100 கோடி வேண்டும் என்கிறார்கள்... சட்டசபை தேர்தல் என்றால் ரூ.25 கோடி வேண்டும் என்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா? என்று தெரியவில்லை.. தேர்தலில் திமுகவுக்கும், பாஜகவுக்கும் தான் போட்டி என்று அண்ணாமலை சொல்லியிருப்பது அவருடைய கருத்து..அதற்கு நான் பதில் அளிக்க வேண்டியதில்லை என்றார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications