பாஜக மாவட்ட செயலாளரின் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்து பெண் பிரமுகர் செய்த பகீர் செயல்
திருச்சியில் உட்கட்சி பூசல் காரணமாக பாஜக பிரமுகரின் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்த பாஜக பெண் உறுப்பினர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி: உட்கட்சி பூசல் காரணமாக திருச்சி மாவட்ட பாஜக செயலாளரின் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெண் நிர்வாகியை களங்கப்படுத்த மாவட்ட செயலாளரின் பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்தது தெரியவந்துள்ளது.
Recommended Video
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்று சொல்வார்கள். உட்கட்சி பூசல் இல்லாத அரசியல் கட்சி இல்லை. அடி தடி சண்டைகள் அடிக்கடி அரங்கேறுவது வாடிக்கயான ஒன்றுதான். மாவட்ட பொதுச்செயலாளரின் பேஸ்புக் கணக்கையே ஹேக் செய்து தவறான பதிவுகளை போட்டு அவரது பெயரை கெடுத்துள்ளனர் சிலர். இதனால் மன உளைச்சளுக்கு ஆளானார் திருச்சி மாவட்ட பாஜக பொது செயலாளர் காளீஸ்வரன்.
தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னைப் பற்றி தவறாக சித்தரித்து அடிக்கடி பதிவுகள் வந்தது குறித்து காளியப்பன் திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். காளீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல்துறை ஆய்வாளர் சிந்துநதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

பாஜக பெண் நிர்வாகி
விசாரணையில் காளீஸ்வரன் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்தது தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரனி கிராமத்தை சேர்ந்த ரவிமுத்துகுமார், 42 என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காளீஸ்வரர் பேஸ்புக்கை ஹேக் செய்ய திருச்சி கருமண்டபம் பகுதியில் வசித்து வரும் பாஜக விவசாய அணியை சேர்ந்த திலகாதான் காரணம் என தெரிவித்தார்.

உட்கட்சி பூசல்
இதனை தொடர்ந்து திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினர் திலகாவையும் அதிரடியாக கைது செய்துனர். பேஸ்புக் ஹேக் செய்தது பற்றி திலாகாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், உட்கட்சி பூசல் காரணமாக இந்த பேஸ்புக் ஹேக்கில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

களங்கம் ஏற்படுத்திய நிர்வாகி
திருச்சியை அடுத்த கல்லணை அருகே உள்ள கிளிக்கூடு பகுதியை சேர்ந்தவர் சுசிலா குமாரி, இவர் புறநகர் மாவட்ட பாஜக செயலாளராக உள்ளார். இதில் சுசிலா குமாரிக்கு பாஜகவில் உயர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட விவசாய அணி ஒருங்கிணைப்பாளராக உள்ள திலகா,என்பவருக்கு பிடிக்கவில்லை. எனவே சுசிலா குமாரிக்கு களங்கம் ஏற்படுத்த திட்டம் தீட்டினார் திலகா.

செய்வினை வைக்கும் நிர்வாகி
ஏற்கனவே திலகா அதே பகுதியில் உள்ள காளி கோவிலை நிர்வகித்து வருகிறார். அங்கு பில்லி, சூனியம் எடுத்தல், மாந்திரீகம் தொடர்பாக பிரார்த்தனைகள் நடத்தப்படுவதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
இதனை பார்த்த தூத்துக்குடியை சேர்ந்த ரவிமுத்துக்குமரன், என்பவர் திலகாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தனக்கு பெரும் பணமிழப்பு ஏற்பட்டதாகவும், அந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும், அதற்கு பிரார்த்தனை செய்யுமாறும் கூறியுள்ளார்.

ஹேக் செய்த திலகா
இதையடுத்து அவரை முகநூலில் நண்பராகும்படி கூறிய திலகா, தான் அனுப்பும் சில படங்கள், கருத்துக்களை குறிப்பிட்ட முகநூல் பக்கத்தில் பதிவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார். இதனையடுத்து பா.ஜ.க. மாவட்ட செயலாளரான காளீஸ்வரனின் முகநூல் பக்கத்தை ஹேக் செய்து, அவரது படத்துடன் போலியான ஒரு முகநூல் பக்கத்தை தொடங்கினார். அதில் அரசியல் எதிரியான சுசிலா குமாரி குறித்து அவதூறு தகவல்களை ரவிமுத்துக்குமரனுக்கு அனுப்பி, போலியான முகநூல் பக்கத்தில் பதிவிட வைத்துள்ளார்.

அழிக்கப்பட்ட படங்கள்
அதேபோல் இந்த பிரச்சினையில் தன்னை தற்காத்துக்கொள்ளும் வகையில் திலகா, அவதூறு படங்கள், கருத்துக்களை ரவி முத்துக்குமரனுக்கு அனுப்பியதும், தனது பக்கத்தில் இருந்து அழித்து விடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதேபோல் காளீஸ்வரன் பெயரில் உருவாக்கப்பட்ட போலி முகநூல் பக்கத்தில் சுசிலா குமாரி பற்றிய தகவல்களை பரப்பியதாக கூறியுள்ளார் திலகா. உட்கட்சி பூசல் காரணமாக பெண் நிர்வாகி பற்றி பெண் உறுப்பினர் முகநூலில் அவதூறு பரப்பிய சம்பவம் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications