ஓட்டை போடுவதில் முருகன் கில்லாடி.. மணிஹீஸ்ட் பார்த்து லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு ஸ்கெட்ச்.. பகீர்!
Recommended Video
திருச்சி: மணி ஹீஸ்ட் என்ற ஹாலிவுட் சீரியல் என்றால் கொள்ளைக்கார முருகனுக்கு கொள்ளை பிரியமாம். இந்த சீரியலை பார்த்துதான், தன்னுடைய வங்கி கொள்ளையை நாடு முழுவதும் அமல்படுத்தி உள்ளார் இந்த திருவாரூர் திருடன்!
லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது முருகன் என்பதும், இவன் நாடு முழுவதும் நடந்த வங்கி, ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவன் என்பதும் தெரியவந்துள்ளது.
நேற்று இந்த கொள்ளையரில் ஒருவனான மணிகண்டனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்து வருகிறார்கள். அப்போதுதான், 11 வருஷமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் முருகனின் திருட்டில் கையாளும் முறை பற்றி விலாவரியாக எடுத்து சொல்லி வருகிறான்.

மணி ஹீஸ்ட்
இதில் முக்கியமான தகவல் முருகன், மணி ஹீஸ்ட் என்ற சீரியலை பார்ப்பவனாம். நெட்ஃப்ளிக்ஸ் இணைய தளத்தில் ரொம்பவும் ஃபேமஸ் ஆன ஒரு க்ரைம் தொடர்தான் 'மணி ஹீஸ்ட்' (Money heist). இதில் 9 கொள்ளைக்காரர்கள் இருப்பார்கள். வரலாற்றிலேயே பெரிய கொள்ளைக்காரர்கள் ஆக வேண்டும், இதுதான் இவர்களின் லட்சியம்.

நூறாவது நாள்
ஸ்பெய்னின் மத்திய வங்கியை கொள்ளையடிக்க இவர்கள் செய்யும் மாஸ்டர் பிளான்தான் கதையின் கரு. இந்த சீரியல் உலகம் முழுக்க ஃபேமஸ் ஆனது. குறிப்பாக வங்கியில் கொள்ளைகாரர்களுக்கு இந்த சீரியல் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியது. எப்படி நூறாவது நாள் பார்த்து சென்னையில் ஜெயபிரகாஷ் என்பவன் தனது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை கொலை செய்தாரோ அதுபோல!

புரொபசர்
திருவாரூர் முருகனுக்கும், இந்த சீரியல் என்றால் பிடிக்குமாம். "எங்களுக்கெல்லாம் பாஸ் முருகன்தான். 'மணி ஹீஸ்ட்' சீரியலை விரும்பி பார்ப்பார். அதில வரும் புரொஃபசரை போல, முருகனும் வேனுக்குள்ளேதான் இருப்பார். இப்ப அவருக்கு உடம்பு சரியில்லை. இருந்தாலும் வேனுக்குள்ளேயே அவர் வாழ்க்கை கழிகிறது. சுவற்றில் ஓட்டை போடுவதில் முருகன் எக்ஸ்பர்ட்.. " என்றார்.

சுவற்றில் ஓட்டை
உண்மையிலேயே முருகன் இதுவரை நடத்திய கொள்ளையில் பெரும்பாலும் வங்கிகளும், ஏடிஎம்களும்தான். சுவற்றில் ஓட்டை போட்டுதான் பணத்தை சூறையாடி இருக்கிறார். லெட்ஜர் படம், பாக்யராஜின் ருத்ரா படம் போல கெட்-அப்கள் இருப்பதாக தோன்றினாலும், "மணி ஹீஸ்ட்" சீரியலில் உள்ள டெக்னிக்கைதான் முருகன் பின்பற்றி உள்ளார்.

திணறடித்தனர்
லலிதா ஜூவல்லரி கொள்ளையிலும் மணி ஹீஸ்ட் சீரியலை போலவே, மாஸ்க், கிளவுஸ், ஜெர்கினுடன் சிசிடிவியில் கொள்ளையர்கள் திணறடித்தனர். இப்போது, எங்கே, எந்த வேனுக்குள் முருகன் சுற்றி கொண்டிருக்கிறார் என தெரியவில்லை. இவ்வளவையும் கண்டுபிடித்த நம் போலீசார் முருகனையும் சுற்றி வளைத்து பிடித்து, கூடிய சீக்கிரம் நம் கண் முன்னாடி நிறுத்துவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications