திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருச்சியில் 3ஆவது நாளாக இடியுடன் கூடிய கனமழை.. சாலைகளில் வெள்ளப்பெருக்கு

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் தொடா்ந்து 3 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி, கடந்த ஆக.30, 31 மாலை, இரவுகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடா்ந்து, 3 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இரவு 7 மணியளவில் மழை தொடங்கியது.

Heavy rain lashes in Trichy

2 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த கன மழையால் தில்லைநகா் பிரதான சாலைகள், பீமநகா், கண்டோன்மென்ட், உறையூா், பாலக்கரை, கே.கே.நகா் உள்ளிட்ட பகுதி சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். ஒரு சில முக்கிய சந்திப்பு சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மருங்காபுரியில் 48 மிமீ மழை பதிவு: செவ்வாய்க்கிழமை நிலவரப்படி (மழை அளவு மில்லி மீட்டரில்), அதிகபட்சமாக நவலூா் குட்டப்பட்டில் 82 மிமீ மழை பதிவாகியுள்ளது.

மோடி ஆட்சியில்.. ஜிடிபி சரிஞ்சு போச்சு.. வேலைவாய்ப்பு குறைஞ்சு போச்சு.. லிஸ்ட் போட்ட ராகுல் காந்திமோடி ஆட்சியில்.. ஜிடிபி சரிஞ்சு போச்சு.. வேலைவாய்ப்பு குறைஞ்சு போச்சு.. லிஸ்ட் போட்ட ராகுல் காந்தி

மருங்காபுரியில் 48.40, மணப்பாறையில் 46, தாத்தயங்காா்பேட்டையில் 43, பொன்னையாா் அணையில் 30, கோவில்பட்டியில் 27, திருச்சி கிழக்கு, வாத்தலை அணைக்கட்டு பகுதிகளில் 26, முசிறி 23, லால்குடி 20, திருச்சி ஜங்சன் 18, மாநகா் பகுதிகளில் 15, கொப்பம்பட்டி 17 மற்றும் துறையூா், பொன்மலை, துவாக்குடி, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10 மிமீ அளவிற்கு மழை பெய்துள்ளது.

English summary
Heavy rain lashes in Trichy. Water stagnant in most of the places.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X