வயலூர் முருகன் உள்ளிட்ட கோயில்கள் முன்பு ஒற்றை காலில் போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர்
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்
கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
இந்து கோவில்களைத் திறக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் நேற்று மாவட்டம் முழுவதும் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, திருச்சி ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன் கோவில் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பகுதி செயலாளர் வெங்கடேசன் தலைமையில் 3 பேர் கலந்து கொண்டனர்.

இதேபோல, உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில், வயலூர் முருகன் கோவில் ஆகியவற்றின் முன்பாகவும் இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று போராட்டம் நடத்தினார்கள்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் மாணிக்க விநாயகர் கோவில் நுழைவு வாயில் முன்பு சிவசேனா கட்சியின் இளைஞரணி மாநில துணைத்தலைவர் திருமுருககணேஷ் தலைமையில் 108 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.
இதேபோல இந்து முன்னணி சார்பில், இந்து வியாபாரிகள் நலச்சங்க மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் போராட்டம் நடத்தினர். இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோஜ்குமார் மற்றும் பா.ஜ.க. நிர்வாகி ராம்திலக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள எறும்பீஸ்வரர் கோவில் முன்பு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. இதையொட்டி இந்து முன்னணியினர் மீது உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை கடைவீதியில் இந்து அமைப்பின் ஒன்றிய நிர்வாகி துரைசாமி தலைமையிலும், சமயபுரம் சந்தைகேட் அருகே ஒன்றிய தலைவர் கந்தசாமி, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் முன்பு கோட்ட செயலாளர் குணசேகர் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.
திருவானைக்கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பும் ஒற்றை காலில் நின்று இந்து முன்னணியினர், நூதன போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜீவரெத்தினம் தலைமை தாங்கினார். இதில் ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் பிரகாஷ், கோட்ட பொதுச்செயலாளர் சிவபெருமாள், கோட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மணப்பாறையில் மாரியம்மன் கோவில் முன்பு ஒற்றை காலில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. முசிறியில், சந்திரமவுலீஸ்வரர் கோவில் முன்பு இந்து முன்னணி நிர்வாகி கந்தமணி தலைமையில், ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கோவில்களை திறக்க வலியுறுத்தி ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று முசிறி அருகே வெள்ளூர் திருக்காமேஸ்வரர், முத்தையநல்லூர் செல்லாண்டிஅம்மன், திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களின் முன்பாகவும் இந்துமுன்னணி சார்பில் நிர்வாகிகள் ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை செய்தனர்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications