ரூ.50 ஆயிரம்.. 8 கிராம் தங்கம்.. திருமண நிதியுதவி பெற விண்ணப்பிப்பது எப்படி.. கலெக்டர் தகவல்
திருச்சி: கை, கால் பாதிக்கப்பட்டோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திட்டம், பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திட்டம், காது கேளாத மற்றும் வாய்பேசாதோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம் உள்பட 2024-2025-ம் நிதியாண்டிற்கு 4 வகையான திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "கை, கால் பாதிக்கப்பட்டோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம், பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம், காது கேளாத மற்றும் வாய் பேசாதோர் நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டம், மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி திருமணம் புரியும் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த திட்டத்தில் திருமணம் முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கமும், தம்பதியரில் எவரேனும் ஒருவர் பட்ட படிப்பு அல்லது பட்டய படிப்பு படித்தவராக இருந்தால் ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற தம்பதியர்களில் இருவருக்கும் அது முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து ஓராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதார் அட்டை, திருமண அழைப்பிதழ் மற்றும் திருமண நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், கணவன்-மனைவி இருவரில் ஒருவர் நல்ல நிலையில் உள்ளார் என்ற மருத்துவ சான்று, குடும்ப அட்டையின் நகல், கல்வி சான்றின் நகல் மற்றும் தம்பதியர் இருவருக்கும் மணமாகவில்லை என்பதற்கான சான்று (இணையதளம் வாயிலாக பெற வேண்டும்) ஆகியவற்றுடன் https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்" இவ்வாறு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி, கலப்பு திருமணம் செய்தவர்களுக்கும் அரசு திருமண உதவித்தொகை வழங்குகிறது.பட்டியல் இனத்தவர்களை திருமணம் செய்தவர்களுக்கு 2.50 லட்சம் அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. அவர்களும் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க முடியும்.
-
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
பெங்களூரில் 5 வருட காதல் கணவனை மர்ம உறுப்பிலேயே... ஓங்கி மிதித்த பெண்.. அடுத்து நடந்த ட்விஸ்ட் -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications