திருச்சியில் பிரபல நகைக்கடையில் மாயமான தங்கம்.. நீயா இந்த வேலையை பார்த்தது.. ஆடிப்போன ஓனர்
திருச்சி: திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் ஏராளமான தங்க நாணயங்கள் மாயமாகி இருந்தது. யார் திருடினார்கள் என்பதை தெரியாமல் தவித்து போன கடை உரிமையாளர், உடனடியாக சிசிடிவி காட்சிகளை கொண்டு யார் திருடினார்கள் என்பதை தேடுமாறு மேலாளருக்கு ஆரம்பித்தார். மேலாளர் தீவிரமாக நடத்திய சோதனையில் அவருக்கு ட்விஸ்ட் காத்திருந்தது. நீயா இப்படி செய்தாய் என்று அவர் அதனை பார்த்து ஆடிப்போனார்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
தங்கம் விலை என்பது கடந்த 2012ம் ஆண்டுகளில் எல்லாம் ஒரு பவுன் தங்கம் வெறும் 10 ஆயிரம் என்கிற அளவில் தான் இருந்தது. ஆனால் 2016ம் ஆண்டு வாக்கில் 20 ஆயிரம் என்கிற அளவிலும், 2020ம் ஆண்டு வாக்கில் 35000 என்கிற அளவில் அதிரடியாக உயர்ந்தது. அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளில் சுங்கவரி உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச சந்தை மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் வேகமாக உயர்ந்து வந்தது. 2024ம் ஆண்டு தொடக்கத்தில் 50 ஆயிரம் என்கிற நிலையையும், இப்போது சுமார் 58000 என்கிற அளவில் உயர்ந்துவிட்டது.

தங்கத்தை தற்போதைய நிலையில் வாங்க வேண்டும் என்றால், செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என தொகைகளை சேர்த்து பார்த்தால்,ஒரு பவுன் நகைக்கு கிட்டத்தட்ட கூடுதலாக 8 ஆயிரம் முதல் 1000 ரூபாய் வரை கூடுதலாக செலவு செய்ய வேண்டியது வரும். அதாவது ஒரு பவுன் தங்கம் 58000 ரூபாய் என்றால், கிட்டத்தட்ட 6700 ரூபாய் என்கிற அளவில் கட்ட வேண்டியதிருக்கும். இதனால் தங்க நகைகளை கடத்துவது மற்றும் திருடுவது போன்ற சம்பவங்கள் இப்போது மிக அதிக அளவில் நடக்கிறது.
தங்கம் ஒன்று மட்டுமே வாங்கிய மதிப்பில் 90 சதவீதம் பணத்தை உடனே வாங்கிவிட முடியும். அதனால் தங்கத்தை திருடுவதில் கொள்ளையர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கொள்ளையர்கள் மட்டுமல்ல, சாமானியர்கள், கடை ஊழியர்கள் என சபலப்பட்டு திருடுவது அடிக்கடி நடக்கிறது. அப்படி திருடி அசிங்கப்பட்டவர்கள் லிஸ்ட் மிகப்பெரியது. அப்படித்தான் திருச்சி நகைக்கடையில் ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி சின்னகடை வீதியில் பிரபல நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் திருச்சி உறையூரை சேர்ந்த 46 வயதாகும் ரவிக்குமார் என்பவர் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடையில் உள்ள நகைகளின் இருப்பு விவரங்களை கடந்த நவம்பர் 22-ந்தேதி வழக்கம் போல் சரிபார்த்தார். அப்போது, கடையில் இருந்த 73 பவுன் எடை கொண்ட 585 தங்க நாணயங்களின் இருப்பு குறைந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், விசாரணை நடத்தினர்.
அப்போது, அதே கடையில் காசாளராக பணியாற்றி வந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தசரதன் (வயது 32) என்பவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அவர் தங்க நாணயங்களை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து ரவிக்குமார் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தசரதனை கைது செய்தார். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
திருச்சிக்கு ஓடி வந்த தென் கொரிய நிறுவனம்.. ஒரே திட்டம் 13000 பேருக்கு வேலை.. அடிசக்க! -
திருச்சி லாட்ஜில் காதலிக்கு போடப்பட்ட போதை ஊசி.. காதலன், நண்பனை விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து












Click it and Unblock the Notifications