வேகமாக மோதிய பஸ்.. திருச்சி - சென்னை சாலையில் பயங்கர விபத்து.. 10 கிமீக்கு லைனில் நிற்கும் வாகனங்கள்
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
திருச்சி: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொழுப்பேடு பகுதி திருச்சி - சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் முக்கியமான பகுதி ஆகும். முக்கியமாக மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த பகுதி வழியாகவே அதிகம் செல்லும்.

அதேபோல் அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள் இந்த பாதையை அதிகம் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. பல லட்சம் பயணிகள் இந்த பாலம் வழியாக செல்லும் நிலையில், இங்கு விபத்துகள் நடப்பது அதிகரித்து வருகிறது.
கனரக வாகனங்கள் இங்கே வேகமாக வருவதாலும், பேருந்துகள் வேகமாக வருவதாலும் இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. நேற்று இந்த பகுதி அருகே அரசு பேருந்து மீது வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது. வேகமாக சென்ற அரசு பேருந்து, முன்னால் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோதியது. இதில் பஸ் ஒரு பக்கமாக திரும்பி சாலையை அடைத்தது. அதோடு பேருந்தின் முன் பக்கத்திலும் கடுமையான சேதம் ஏற்பட்டது.
லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு ஓட்டுனர் தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதிகாலை 5 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. வேகமாக வந்த பேருந்து நிறுத்தப்பட்டு இருந்த லாரியை பார்க்காமல் அதில் வேகமாக மோதி உள்ளார். இதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் லாரியில் இருந்தவர்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. பேருந்து ஓட்டுனர் மட்டும் லேசான காயம் அடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாரும் இந்த விபத்தில் பலியாகவில்லை. இந்த விபத்தை தொடர்ந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 கிலோமீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி இரவில் வந்த வாகனங்கள் எல்லாம் இந்த பகுதியை கடக்க முடியாமல் வரிசைகட்டி நிற்கின்றன. டிராபிக் போலீசார் அங்கே களமிறக்கப்பட்டு போக்குவரத்தை அதிகாலையில் இருந்து சரி செய்து வருகிறார்கள்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications