எப்ப பார்த்தாலும் ராஜேஸ்வரிக்கு "இதே" வேலை.. விடிகாலை வீட்டுக்குள் பாட்டு சத்தம்.. அலறி போன திருச்சி
மனைவியை கொன்ற கணவனை போலீசார் தேடி வருகிறார்கள்
திருச்சி: எந்நேரமும் ராஜேஸ்வரி போனில் யாருடனோ பேசி கொண்டே இருந்தாராம்.. யாரிடம் பேசினார், எதற்காக பேசினார் என்று தெரியவில்லை.. அதற்குள் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டார் கணவர்..!
திருச்சி தில்லைநகர் பகுதியில் வசித்து வருபவர் தவசீலன்.. 27 வயதாகிறது.. இவர் பரோட்டா மாஸ்டர்.. அங்கேயே ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார்.... மனைவி பெயர் ராஜேஸ்வரி.. 22 வயதாகிறது.. இருவரும் காதலித்து கல்யாணம் செய்தவர்கள். 5 வயதில் சாய் பிரசாத் என்ற மகனும் 2 வயதில் கவிநிலா என்ற மகளும் உள்ளனர்.
கொஞ்ச நாளாகவே ராஜேஸ்வரி அடிக்கடி போனில் யாருடனோ பேசி கொண்டிருந்தாராம்.. இதை தவசீலன் கவனித்துள்ளார்.. தனியாக ஒரு வாடகை வீட்டில்தான் இவர்கள் குடியிருந்தனர்.. வேலைக்கு போய்விடுவதால் வீட்டில் பெரும்பாலான நேரங்களில் ராஜேஸ்வரி தனியாக இருக்கிறார்..

சந்தேகம்
அதனால்தான் இப்படியெல்லாம் போனில் பேசுகிறார் என்று நினைத்த தவசீலன், கடந்த சில நாட்களாக மன்னார்குடியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு வரும்படி கூப்பிட்டுள்ளார்.. ஆனால், அங்கே வரமாட்டேன் என்று ராஜேஸ்வரி பிடிவாதம் பிடித்துள்ளார்.. இதுதான் தம்பதிகளுக்குள் அடிக்கடி தகராறாகவும் உருவெடுத்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த தவசீலன், அப்போதும் ராஜேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பாட்டு சத்தம்
எப்போது சண்டை நடந்தாலும், அக்கம்பக்கத்தில் உள்ள சொந்தக்காரர்கள் வந்து இவர்களை சமாதானப்படுத்திவிட்டு போவார்களாம்.. அப்படித்தான் ராத்திரியும் ராஜேஸ்வரியின் அக்கா சகுந்தலா உட்பட பலரும் அட்வைஸ் தந்துவிட்டு போனார்கள். விடியற்காலை 3 மணி இருக்கும்.. துணி துவைப்பதற்காக சகுந்தலா வெளியே வந்தார்.. அப்போதுதான், ராஜேஸ்வரி வீட்டில் இருந்து பாட்டு சத்தம் கேட்டது.. இந்த நேரத்தில் யார் இவ்வளவு சத்தமாக வைத்து பாட்டு கேட்கிறார்கள் என்று சந்தேகப்பட்டு, அங்கே சென்றால் அந்த வீட்டின் வெளிப்பக்கத்தில் கதவு சாத்தியிருந்தது..

சகுந்தலா
இதனால் கதவை தள்ளி கொண்டு உள்ளே சென்று பார்த்தால், ராஜேஸ்வரி கையில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.. அவர் அந்த ரத்தவெள்ளத்திலேயே சடலமாக விழுந்து கிடந்தார்.. அந்த சடலத்துக்கு பக்கத்தில் அவரது இரண்டு குழந்தைகளும் அழுது கொண்டே நின்றிருந்தனர்.. இந்த கோலத்தை கண்டதும் சகுந்தலா அலறினார். தகவலறிந்து தில்லை நகர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றினர்.. விசாரணையும் ஆரம்பமானது..

தலைமறைவு
2 குழந்தைகள் மட்டுமே அப்போது வீட்டில் இருந்தனர்.. இதில், ராஜேஸ்வரியின் 5 வயது மகன் போலீசாரிடம் சொல்லும்போது, அப்பாதான் அம்மாவை கட்டையால் அடிச்சிட்டார்.. கழுத்தை நெரிச்சிட்டார் என்று அழுதுகொண்டே சொன்னான். இப்போது தவசீலனை காணோம்.. தலைமறைவாகி விட்டார். அதனால் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.. ராஜேஸ்வரியின் செல்போனையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்..!
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications