சாப்பாடு பார்சல் கட்டி எடுத்து வரணும்! வண்டியை வழியில் நிறுத்தக் கூடாது! விசிக மாநாடு சுவாரஸ்யம்!
திருச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ''வெல்லும் சனநாயகம்'' மாநாடு நாளை திருச்சியில் நடைபெறும் நிலையில், அதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களுக்கு நிர்வாகிகள் அவரவர் ஊர்களில் இருந்தே சாப்பாட்டை பார்சல் செய்து கொடுத்துவிட வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த விசிக மாநாடு பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு ஒரு வழியாக நாளை நடைபெறவுள்ளது. மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கெல்லாம் நிறைவடையும் வகையில் நிக்ழ்ச்சி நிரல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாநாடுக்கு வரும் வழியில் வண்டியை நிறுத்தக் கூடாது என்பதும் தொண்டர்களை கட்டுக்கோப்பாக மாநாடுக்கு அழைத்து வந்து மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதும் விசிக மாவட்டச் செயலாளர்களுக்கு திருமாவளவன் போட்டுள்ள மற்றொரு முக்கிய உத்தரவாகும். அதேபோல் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் அவரவர் மாவட்டங்களின் செய்தித்தாள்களில் கட்டாயம் கால் பக்கம் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்றும் மாவட்டங்களில் உள்ள முக்கிய இடங்கள், மக்கள் கூடும் கடைத்தெரு பகுதிகள் என அடையாளம் கண்டு அங்கெல்லாம் பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்ட வேண்டும் எனவும் விசிக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், மது அருந்தும் பழக்கம் உடையவர்கள், ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்களை அழைத்து வரக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு திருமாவளவன் கறார் கண்டிஷன் போட்டிருப்பது கவனிக்கத் தக்கது. மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக மாநாட்டிற்கு மூன்றில் ஒரு மடங்காவது பெண்களை அணி திரட்டி வருவதற்கான முயற்சிகளை மும்மரமாக மேற்கொள்ள வேண்டும் என திருமாவளவன் அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
விசிக மாவட்ட செயலாளர்கள் ஏனோ தானோ என்று கணக்கு சொல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய வாரியாக ஒவ்வொரு முகாமிலிருந்தும் எத்தனை பேர் மாநாட்டிற்கு வருகிறார்கள் என்ற எண்ணிக்கையை துல்லியமாக தலைமைக்கு சொல்ல வேண்டும் என திருமாவளவன் செக் வைத்திருப்பது கவனிக்கத்தக்கது.
-
திருமாவளவன் சட்டசபை தேர்தலில் போட்டி ஏன்? ஸ்டாலின் - விஜய் தான் காரணமா? பின்னணியில் 3 முக்கிய மேட்டர் -
வேட்பாளரானார் திருமாவளவன்.. விசிக சார்பில் சட்டசபை தேர்தலில் களமிறங்கும் 8 வேட்பாளர்கள் அறிவிப்பு -
திருமாவளவனின் புது கணக்கு.. விசிகவுக்கு பிரச்சனை! அங்கீகாரத்தை இழக்கும் கட்சி? என்ன நடக்குது? -
87 ஓட்டுகளில் கையை விட்டு போன காட்டுமன்னார்கோவில்! 10 ஆண்டு கழித்து மீண்டும் திருமாவளவன் போட்டி! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications