ஆர்வமிகுதியில் அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்கள்... பலமுறை கடிந்தும் கேட்காத உ.பி.க்கள்..!
திருச்சி: திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் ஆர்வமிகுதியில் அவரை மையமாக வைத்து பிரம்மாண்டங்களை காட்டி வருகின்றனர்.
தன்னை வரவேற்கிறேன் என்ற பெயரில் மக்களின் கண்களை உறுத்தும் வகையில் தடபுடல் ஏற்பாடுகள் வேண்டாம் என பலமுறை தனது ஆதரவாளர்களிடம் நேரு கடிந்துகொண்டும் அதை கேட்டதாக தெரியவில்லை.
கே.என். நேருவின் படத்தோடு தங்களின் படத்தையும் பேனரிலும், போஸ்டரிலும் போட்டு ஏரியாவில் தங்களை பப்ளிசிட்டி செய்யவே பலரும் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் அனுமானிக்க முடிகிறது.

திருச்சி மாவட்டம்
கால் நூற்றாண்டு காலமாக திருச்சி மாவட்ட திமுகச் செயலாளராக இருந்த கே.என்.நேரு, கடந்த 2020-ம் ஆண்டு கட்சியின் முதன்மைச் செயலாளராக புரோமோஷன் பெற்றதால் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அண்ணா அறிவாலயத்தில் தனி அறை, கட்சியில் அதிகாரமிக்க பதவி என மகிழ்ச்சியடையாமல், மாவட்டச் செயலாளர் பதவி பறிபோகிறதே என நினைத்து கே.என்.நேரு சற்று வருத்தப்பட்டார்.

விசுவாசி
இதையடுத்து திருச்சி மாவட்டம் கட்சியின் நிர்வாக வசதிக்காக தெற்கு, வடக்கு, மத்திய என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அப்படி பிரிக்கப்பட்டதில் மத்திய மாவட்டத்துக்கு அதாவது திருச்சி மாநகரை உள்ளடக்கிய பகுதிக்கு தனது விசுவாசியான வைரமணியை பொறுப்பாளராக கொண்டு வந்தார். இன்று வைரமணி தான் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் என்றாலும் கூட, முடிவெடுக்கும் அதிகாரம் நேருவிடம் தான் என அவரது ஆதரவாளர்களே கூறி வருகின்றனர்.

ஒரு லட்சம் ரூபாய்
இதனிடையே கே.என்.நேருவை வைத்து விழா நடத்தும் தனியார் அமைப்பினரும் கட்சியினருடன் போட்டி போடும் வகையில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இப்படித்தான் கடந்த வாரம் ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஒரு டன் எடையுள்ள ரோஜாபூ மாலையை நேருவுக்கு சூட்டுவதற்காக தனியார் அமைப்பு ஒன்று தயாரித்து வத்திருந்தது. 7 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட அந்த ரோஜாப்பூ மாலை கிரேன் மூலம் நேருவின் கழுத்தில் சூட திட்டமிடப்பட்டது.

விழா அரங்கம்
அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த நேரு, அந்த பிரம்மாண்ட மாலையை பார்த்தவுடன் படு டென்ஷனாகிவிட்டார். ''ஏன்யா இப்படி பண்றீங்க, சி.எம். எளிமையா இருக்கச் சொல்லியிருக்காரு, அவரே எளிமையை பின்பற்றும் போது நாம் இப்படி செய்தா அது நல்லாவா இருக்கும்'' என பேசிக்கொண்டே விழா அரங்கத்துக்குள் சென்றுவிட்டார். கடைசி வரை அந்த மாலையை நேரு சூட்டிக்கொள்ளவே இல்லை.

கோபம்
இது ஒரு புறம் என்றால் மற்றொரு புறம் கட்சியினர் ஆர்வக்கோளாறில் செய்யும் அலப்பறைகளால் நேருவின் முகம் எள்ளும், கொள்ளுமாக வெடிக்கிறது. இதனிடையே நேருவை மட்டும் மையப்படுத்தி விளம்பர அரசியல் செய்து வந்த பலர் இப்போது அவரது மகன் அருண் நேருவின் படத்தை வைத்தும் விளம்பர அரசியலை தொடர்கின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications