Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார்த்தி சிதம்பரம் மீண்டும் வந்துட்டாரு.. திருக்குறளை கையிலெடுத்த ஆளுநர் ரவி? ஆன்மீக கருத்து உள்ளதா?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தெய்வீக உத்தரவுகள் நிறைவேற்றப்படும்போது நாடு தெய்வீக தேசமாக ஒளிரும். திருக்குறள் ஒரு ஆன்மீகப் புத்தகம். சில அரசியல் சிந்தனையாளர்கள், ஆன்மீகத்தில் இருந்து திருக்குறளைப் பிரிக்கப் பார்க்கிறார்கள். சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி திருவள்ளுவர்" என்று ஆளுநர் ரவி பேசியிருக்கும் கருத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற விழாவில் ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி, கோயில் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி ஐயங்கார் எழுதிய 'குணசீல மஹாத்மியம்', சென்னகரை சுப்பிரமணியன் எழுதிய 'வள்ளுவத்தில் மெய் ஞானம்' ஆகிய நூல்களை ஆளுநர் வெளியிட்டார்.

Karti Chidambaram Thirukkural governor Ravi

ஆளுநர் ரவி பேச்சு

நிகழ்வில் பேசிய ஆளுநர், "மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தர்மம் ஒன்றுதான். அது சனாதன தர்மம் மட்டும்தான். பாரதம், தர்மம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தர்மம் அழிந்தால், நாடு அழிந்துவிடும். யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் உருவாகக் காரணமாக இருப்பவை கோயில்கள்.

அத்தகைய தெய்வீக உத்தரவுகள் நிறைவேற்றப்படும்போது நாடு தெய்வீக தேசமாக ஒளிரும். திருக்குறள் ஒரு ஆன்மிகப் புத்தகம். சில அரசியல் சிந்தனையாளர்கள், ஆன்மீகத்தில் இருந்து திருக்குறளைப் பிரிக்கப் பார்க்கிறார்கள். சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி திருவள்ளுவர்" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

2 வருடத்துக்கு முன்பும் ஆளுநர் ரவி திருக்குறள் குறித்து கருத்து கூறியிருந்தார்.. ஒரு விழாவில் பேசும்போது, "திருக்குறள் கற்பிக்கும் ஆன்மீகம் குறித்து யாரும் பேசவில்லை. ஆன்மீகம்தான் இந்தியாவின் ஆணிவேர் என்பதை யாரும் பேசவில்லை.

மொழிபெயர்ப்பு

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழிபெயர்த்துள்ளார். ஆதிபகவன் என்றால் முதன்மைக் கடவுள் என நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஜி.யு.போப் இதற்கான அர்த்தத்தை புரிந்து இருந்தாலும் 'முதன்மைக் கடமை' (PRIMAL DUTY) என எழுதியுள்ளார்.

திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர். ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது" என்று தெரிவித்திருந்தார்..

திராவிட கட்சிகள்

திருக்குறள் குறித்து ஆளுநரின் இந்த கருத்துக்கு, திராவிட கட்சிகள் தங்களது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.. இந்நிலையில், சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி தந்துள்ளார்.. அப்போது, திருக்குறளில் ஆன்மிக கருத்து உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை என்று கருத்து கூறியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் பேசும்போது, "-சபை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விண்ணப்பம் வைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி, சசிதரூருக்கு தகுந்த மரியாதை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.


தங்க நகைக்கடன்

தங்க நகைக்கடன் பெறுவதில் 2 விதமான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது நடுத்தர மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும். மத்தியில் உள்ள அரசு, அடித்தட்டு மக்களின் வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பது தெரியாமல் ஆட்சி செய்கிறார்கள். இந்த விதிமுறைகளை முழுமையாக தளர்த்த வேண்டும்.

திருக்குறளில் ஆன்மிக கருத்து உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் கவர்னர் ரவி கூறுவது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது. திருக்குறள் குறித்து கவர்னரை பொறுத்தவரை அவர் வேண்டுமென்றே வம்பு இழுக்கும் ஆளாக உள்ளார்" என்று தெரிவித்திருக்கிறார்.

ஆன்மீக புத்தகம்

திருக்குறள் ஆன்மீக புத்தகம் என்று ஆளுநர் கூறியிருந்ததற்கு ஏற்கனவே திமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.. "திருக்குறள் மற்றும் திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை. திருவள்ளுவரை ஒரு துறவி என யாருமே கூறியது கிடையாது. அவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவி இருந்ததாகவும் கருத்து இருக்கிறது.

இல்லறம் குறித்து அவரைப் போல கவித்துவமாக எழுதியிருப்பவர்கள் யாருமே இருக்க முடியாது. திருக்குறளை படித்து புரிந்து கொள்ளக்கூடிய நாம் அவரை துறவியாக பார்த்ததே கிடையாது. திருக்குறளில் எந்த ஒரு மத அடையாளமும் கிடையாது. சனாதனம் உள்ளிட்ட வேறு எந்த மதத்தையுமே நாம் அவர் மீது திணிக்க முடியாது". என்று திமுக எம்பி கனிமொழி கூறியிருந்தார்.

அதேபோல கவிப்பேரபரசு வைரமுத்து, ஆன்மிகம் அதில் ஏது? வள்ளுவம் வாழ்வியல்நூல் அது காற்றைப்போல் பொதுவானது காற்றுக்கு யார் சாயம் அடிப்பது" என்று காட்டமாக கேட்டிருந்தார். இந்நிலையில், திருக்குறளில் ஆன்மீக கருத்து உள்ளது என்பதை தான் மறுக்கவில்லை என்று கார்த்திக் சிதம்பரம் கூறியிருப்பது சலசலப்பை உண்டுபண்ணி வருகிறது.


கார்த்திக் சிதம்பரம்

சொந்தக் கட்சிக்கு எதிராகவும், கூட்டணிக்கு எதிராகவும் கார்த்தி சிதம்பரம் பேசுவதாக பலமுறை சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன.. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, "மோடிக்கு நிகரான தலைவர் ராகுல் காந்தி இல்லை" என்று கூறியிருந்தார்.. பிறகு "2026-ம் ஆண்டு அமையும் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற வேண்டும்" என்றும் கொளுத்திப் போட்டிருந்தார்..

தற்போது, "கவர்னர் வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கிறார் என்று கார்த்தி சிதம்பரம் கூறினாலும், திருக்குறளை ஆன்மீக புத்தகமாக சொல்லியிருப்பது மீண்டும் பரபரப்பை கூட்டியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+